பக்கம் எண் :

உயர
 

தமிழ் மொழி வரலாறு

126

ஆ. பிற்காலப் பெயர்ப்பதிலி விகுதிகளைக் கொண்டுள்ள பழைய வடிவங்கள்

பழைய வடிவங்களுடன் திணை, பால், இடம் காட்டும் விகுதிகளைச் சேர்த்துப் புதிய வடிவங்கள் வளர்ச்சியுற்றன. பின்னர்க் காலங் காட்டும் கருத்துக்கள் இவற்றிற்குக் கொள்ளப்பட்டன. பிற வினைவிகற்ப வடிவங்களிலிருந்து இவை மாறுபட்டவை. வளர்ச்சியுற்ற வடிவங்கள் இரு வகைப்படும் :

1. ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வடிவத்திலிருந்து வந்தவை.
2. ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வடிவத்திலிருந்து வந்தவை.
   ‘ - இசின்’ வடிவங்கள் இதன் உட்பிரிவாகும்.

இவ்வளர்ச்சிப் போக்கு ஏவல் வினைக்கும் விரிவுபடுத்தப்பட்டது;
செய் > செய்யாய்.

இசின்: நுவன்றிசி.44 சங்க இலக்கியங்களில் இது போன்ற வடிவங்கள் பல உண்டு.45


44. தொல்காப்பியம், 102.

45. A. Sadasivam :

“The Suffix cin in Cankam Tamil”, Tamil Culture, Vol. VII, 958, pp 140-150.