பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

127

முன்னிலை :

 

செய்தி ~ செய்தீ (934)
செய்மோ (934)
செய் ¥ செய்யாய் (983)
செய்தி (நீ செய்கிறாய் / நீ செய்தாய்)

‘சின்’ என்பதைத் தொல்காப்பியர் முன்னிலை அசை நிலை எனக் குறிப்பிடுவதால்,46 ‘நின்றிசின்’ என்பதில் உள்ள ‘நின்றி’ போன்ற வடிவங்கள் முன்னிலை முற்றான ‘செய்தி’ என்னும் வாய்பாட்டினவான முன்னிலை முற்றுக்கள் எனக் கொள்ளப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஏவல் வினை ‘இசின்’ என்னும் அசைநிலையையும் பெற்று வருவதுண்டு. சான்று : ‘கண்டிசின்’47.

படர்க்கை :

  வினைமுற்றுக்களும் ‘இசின்’ பெற்று வருவதுண்டு.
  ஆண்பால் பெண்பால் அஃறிணை
  சென்றிசின்48 பெற்றிசின்49 போன்றிசின்50
  இசினுக்குப் பின் பெயர்ப்பதிலி விகுதிகள் வருகின்றன.
    ஆண்பால்  : புகழ்ந்திசினோன்51  
    பெண்பால்  : பிரிந்திசினோள்52  
    பலர்பால்  : கண்டிசினோர்53  

‘செய்யும்’ என்னும் வடிவமும் பெயர்ப்பதிலி விகுதிகளுடன் வருகிறது:
 


46. தொல்காப்பியம், 759

 

“மியா இக மோ மதி இகும் சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்”.

47. அகநானூறு,
 99 ஆவது பாடல்.
48. நற்றிணை, 394.
9. புறநானூறு, 58.
50. நற்றிணை, 240.
51. அகநானூறு, 210.
52. கலித்தொகை, 336.
53. ஐங்குறுநூறு, 85.