தமிழ் மொழி வரலாறு
128
செய்யும்
¥
செய்ம் + அன் + ஆர் > செய்மனார்.
செய்யும்
¥
செய்ம் + அர் > செய்மர்.
செய்யும்
¥
செய்ம் + ஆர் > செய்மார் > செய்மோர்.
பிற திணைப்
பால்களுக்கும் இதைப் போன்ற வடிவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பின்கண்ட வடிவங்கள்
மட்டுமே கிடைக்கின்றன : உணருமோர் (193). கீழ்க் கண்டவை ‘செய்யுந்’ வடிவத்தின்
அடிப்படையாகத் தோன்றியவை.
|
ஆண்பால்
: செய்யுந் + அன்
பெண்பால்
: செய்யுந் + அள்
பலர்பால்
: செய்யுந் + அர்
ஒன்றன்பால்
: செய்யுந் + து
பலவின்பால்
: செய்யுந் + அ |
ஆனால்
பின்கண்ட வடிவங்கள் மட்டுமே தொல்காப்பியத்தில் வருகின்றன.
|
பலர்பால் : அறிநர் (1447)
பலவின்பால் : தகுந (1177) |
‘செய்யும்’
என்பதன் மாற்று வடிவமாகத் தொல்காப்பியர் ‘செய்யுந்து’ என்பதைக் கொள்கிறார் [777 ].
ஆனால் அதை ‘செய்யுந்து’ எனக் கொள்ளவும் இடம் இருக்கிறது.
தனிநிலைப்
பெயர்களுடன் விகுதிகள் சேர்க்கப்பட்ட நிலையில், அவை பெயர்களின் கட்டுகளைக்
குறிக்கின்றன. ஒப்புமையாக்கத்தாலும் பொதுநிலைப்படுத்தலாலும் இடப்பெயர் விகுதிகள்,
இடப்பெயர்ப்பதிலிகளின் கட்டு வடிவங்கள் அல்லது வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த
வடிவங்களோடு ஒத்தன ஆயின. இந்நிலையில் இடப் பெயர் விகுதிகளுக்கு அல்லது பெயர்ப்
பதிலிகளுக்கு முன்னர் வருவன எல்லாம் தனித்து வழங்கும் அல்லது கட்டு வடிவ அடையாக
இருக்கவேண்டும். பால் முதலியன காட்டும் விகுதிகள் சேர்க்கப்பட்ட தனித்து வழங்கும்
வடிவங்களே பெயரெச்சங்களாகும்.
கட்டு
வடிவங்களைப் பொறுத்த வரையில் தமிழில் இரு மாறுபட்ட முறைகளில் அடைச்சொற்கள்
அமைகின்றன. தொகைச் சொற்களில் உள்ளது போலப் பெயர்ச் சொல்லோ அல்லது அதனது வேரோ
‘முன் பின்னாக’ அமைவதைப் பொறுத்து அவற்றில்
|