பக்கம் எண் :

ஒன
 

தமிழ் மொழி வரலாறு

129

ஒன்று அடையாகிறது. அடை அமைப்பைத் தெளிவுபடுத்த சில இடைச்சொற்கள் பயன்படுத்தப்படும் பிறிதொரு முறையும் உண்டு. இவ்விடைச்சொற்கள் சாரியைகள் எனப்படும். சான்று : ‘மெய் + அளபு > மெய்யின் அளபு’.54 இங்கு ‘இன்’ என்பது சாரியையாகும். ஒழுக்கம் + களவு > ஒழுக்கத்துக்களவு.55 இங்கு அத்து என்பது சாரியையாகும். அடையும் எழுவாயின் கட்டுவடிவமும் சேர்ந்து அமைந்தவை வினைமுற்று வடிவங்கள் ஆகும்; இங்ஙனம் அவை அடை அமைப்புகளுக்குச் சான்றுகளாகின்றன. அவை சாரியையுடன் வரலாம்; சாரியையின்றியும் வரலாம்.

சான்று :

மரபு + இன் + து > மரபிற்று (1011) இங்கு ‘இன்’ என்பது சாரியை
மரபு + இன் + அ > மரபின் (594) இங்கு ‘இன்’ என்பது சாரியை
+ து > மேற்று (1224) இங்கு சாரியை இடம் பெறவில்லை.

வேற்றுமை ஏற்கத் திரிந்த வடிவங்களோடு பெயரெச்ச விகுதிகளைச் சேர்க்கலாம். இதன் விளைவாகக் கிடைக்கும் வடிவத்தோடு பெயர்ப்பதிலி விகுதிகள் சேர்க்கப்படுகின்றன.

சான்று :

  புறம் + அத்து > புறத்து + அ > புறத்த + அன் > *புறத்தான் > புறத்தோன்.56
கழல் + இன் > கழலின் + அ > கழலின + அன் > *கழலினான் > கழலினோன்.57

பழைய வடிவங்களுடன் அல்லது அவற்றின் பெயரெச்ச வடிவங்களுடன் பால் விகுதிகள் நேரடியாகச் சேர்க்கப்படுகின்றன.

என்னும் > என்ம் + அர் என்மர் (சாரியையில்லாமல்)

பெயர்த்தன்மையது எனக் கருதப் பெறும் பெயரெச்சத்துடன் அல்லது ‘செய்யும்’ என்னும் முற்றுடன், பால் விகுதிகள் சேர்க்கப் படுகின்றன.
 


54. தொல்காப்பியம், 11.
55. தொல்காப்பியம், 1092.
56. தொல்காப்பியம், 1013.
57. அகநானூறு, 76, 77.