பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

130

 

செய்யும் + அன் + அ + அர் > * செய்யுமார் > செய்யுமோர்
செய்யும் + அன் + அ > செய்யுமன

இங்கு இடம் பெறும் ‘அன்’ என்பதை நன்கு விளக்க வேண்டியுள்ளது. இது சாரியை எனப்படும். பழைய வேற்றுமையுருபான இது பிற்காலத்தில் வேற்றுமையுருபேற்கும் வடிவங்களில் மிகுதியும் காணப்படுகிறது. பெயர்த்தன்மையதான அடி சாரியையைப்பெற்று, பின்னர் இறுதி விகுதியைப்பெறுகின்றது.

வந்த் + அன் + அன் > வந்தனன்.

மொழி இறுதி னகர மெய் இழக்கப்படுவதால் ‘வந்தன்’ என்பது ‘வந்த’ என்றாகிறது. தெலுங்கில் பெயரெச்சத்தில் உள்ள மூக்கொலி புணர்ச்சியினால் தோன்றியது எனத் தவறாகக் கருதப்படுகிறது.

சான்று : ‘nilpinan dharmamu’, “நிறுவிய தர்மம்”.

இங்ஙனம் பெயரெச்ச விகுதியான அகரம் தனது மாற்று வடிவம் என்ற முறையில் ‘அன்’ என்பதுடன் தொடர்புள்ளது. பழைய பெயர்த்தன்மையுடைய சொற்களான ‘வந்து’ போன்றவற்றின் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவமே பெயரெச்சம் எனக் கருதலாம்.

3. 0 பெயர்கள்

3. 1 பெயர்ப்பதிலிகள் (Pronouns)

தன்மை

  ஒருமை பன்மை

எழுவாய்
வேற்றுமை

யான் (192) யாம் (182) / நாம் (188)

உருபேற்கத்
திரிந்த வடிவம்

என் (192) எம் / நம் (190)


முன்னிலை

எழுவாய்
வேற்றுமை

நீ (179) நீயிர் (659) / நீவிர் (628)

உருபேற்கத்
திரிந்த வடிவம்

நின் (179) நும் (162)