பக்கம் எண் :

i உம
 

தமிழ் மொழி வரலாறு

133

i

உம்மைத் தொகை எ-டு ‘இராப்பகல்’

ii

உவமத் தொகை ‘மதிமுகம்’

iii

பண்புத் தொகை ‘செங்குதிரை’

iv

வினைத் தொகை ‘கொல்யானை’

v

அன்மொழித் தொகை ‘மதிமுகம்’

அன்மொழித் தொகை என்பது குறிப்புப் பொருள் தருவதாகும். எனவே அதைப் பொருளனியலின் கீழ் ஆராய வேண்டும். உம்மைத் தொகை மட்டுமே இணை நிலைத் தொடராக விளங்குகிறது. எஞ்சிய அனைத்தும் அடைத் தொடர்களாகும்.

‘வேற்றுமைத் தொகை’ என்ற பெயர் பிற்கால வளர்ச்சியினையொட்டி ஏற்பட்டதாம். வேற்றுமைத் தொகை அடைத் தொடரேயாகும். பண்புத்தொகையில் முதற்சொல் வேராக அமைகிறது. வேற்றுமைத் தொகையில் எப்பெயர்ச் சொல்லும் வேராக இருக்கலாம். உவமைத் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகையேயாகும். இலக்கியத்துள் இதுபெறும் இதனது சிறப்புக் கருதியே இது தனியே குறிப்பிடப்படுகிறது.

இணைநிலைத் தொடரான உம்மைத்தொகையைத் தனியாகப் பிரித்துவிட்டால் பிற தொகைகளையெல்லாம் பயனிலைத் தொடருக்கு மாறான அடைத்தொடர் என்ற ஒரே பிரிவில் அடக்கிவிடலாம். பயனிலைத் தொடரில் எழுவாய்க்குப் பிறகு ஒரு இடையீடும் பயனிலைக்குப் பிறகு ஒரு வாக்கிய இடையீடும் உள்ளன.

பெரும்பாலான சமயங்களில் பெயர்களுக்கும் வினைகளுக்கும் இடையே வேறுபாடு இல்லாதிருப்பதால் ‘நனி’ என்பது போன்ற அடைகள் இரண்டிற்கும் பொதுவாக வருவதைக் காணலாம்.

சான்று : நனி தின்றான்
           நனி பேதை

ஆனால் பிற்காலத்தில் பெயர்களுக்கும் வினைகளுக்கும் இடையே வேறுபாடுகள் நிலைபெற்று விட்டதால், பெயர் அடையும் வினை அடையும் தனி வளர்ச்சி பெற்று முறையே பெயரெச்சம், வினையெச்சம் என்றாயின. வேர்கள், - தொழிற்பெயர் வேர்கள் உட்பட - ‘கொல்யானை’ என்பதில் உள்ளது போலப் பெயர்களுக்கு அடையாகவே வருகின்றன. இவ்வாறு வருவன வினைத்தொகை எனப்படும். பிறவிடங்களில் தொகையின் முதலில் பெயர்ச்சொல்