பக்கம் எண் :

இடம
 

தமிழ் மொழி வரலாறு

134

இடம்பெற, இங்கு முதற்சொல் வினைவேராக இருப்பதைக் காண்க.

சான்று : ‘அருநிலை’. இவை பண்புத்தொகையுமாகும். இவற்றின் முதற்சொற்கள் பெயர் எச்சங்களாக வளர்ச்சியுற்று, தனித்த வடிவங்களாக வழங்குகின்றன.

சான்று :

கொன்ற யானை
         அரிய நிலை

சில வேர்கள் வினையடைகளாக வருவது சங்ககாலத்திலும் உண்டு.

சான்று :

வரி + புனை + பந்து > வரிப்புனைபந்து

‘வரி’ என்பது ‘வரிந்து’ என வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. ‘புனை’ என்பது ‘புனைந்து + அ’ என வளர்ச்சியுற்றுப் பெயரெச்சமாகிறது. ‘வரிப்புனைபந்து’ என்னும் அமைப்பானது ‘வரிந்து புனைந்த பந்து’ எனத் தொடராக மாறிவிடுகிறது; ஆனாலும் தொகைக்குரிய பொருளிலேயே அது வழங்குகிறது.

‘தலை, இடை, கடை’ என்பன போன்ற பெயர்கள் ‘படு’ என்பது போன்ற வினைவேர்களுக்கு முன் ஒட்டாகின்றன.

சான்று :

தலைப்படு
இடைப்படு
கடைப்பட்டு

தொல்காப்பியத்தில் இத்தொகைகள் ஏனோ வேறுபடுத்தப்படவில்லை. தொகைகள் பெயர்களால் அமைந்தவை எனச் சிலர் கூறுவர். பெயர்களும் வினைகளும் சேர்ந்து தொகைகளாவதாகச் சேனாவரையர் பேசுகிறார்.61

3. 3 தொகைகள் இருசொற்களாக

இரண்டாவது சொல்லின் முதல் வெடிப்பொலி இரட்டிப்பதன் மூலம் தொகைகள் உணர்த்தப்படுகின்றன. நெடில் வெடிப்பொலியுடன் முடியும் வடிவங்களுக்கும் குறில் வெடிப்பொலியுடன் முடியும் வடிவங்களுக்கும் இடையே வட்டார வழக்கு மாற்றங்கள் உண்டு என்பதை முன்னரே கண்டோம். தொகைகளில் தனித்து வழங்கும் வடிவங்களிலிருந்து தனித்து வழங்காதவற்றை வேறுபடுத்த இவை பின்னர் பயன்பட்டன.


61. தொல்காப்பியம், 551 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.