தமிழ் மொழி வரலாறு
135
சான்று :
தனித்து வழங்காதவை |
தனித்து வழங்குவன |
இருப்பு (வேலி) |
இரும்பு |
மருத்து
(-ப்-பை) |
மருந்து |
யாட்டு
(-க்-கால்) |
யாடு |
சில வடிவங்கள்
‘(அ) த்து’ என்பது போன்ற இடைச்சொற்களைப் பெறுகின்றன.
மரம் + (அ) த்து > மரத்து
மேலே கூறப்பட்ட
சான்றுகளைப் பொதுமைப்படுத்திக் காண்கையில் ‘மரத்து’ என்னும் கட்டுவடிவத்தின் தனித்து
வழங்கும் வடிவம் *மரது என்றாகும். ஆனால் இச்சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே
வழக்கிழந்து விட்டது. ‘மரம், மரன்’ ஆகிய சொற்களே ஆட்சியில் உள்ளன. ஆரம்பத்தில் மகர
ஈறு பன்மையைக் குறித்ததால் ஒருமையில் வேற்றுமை உருபேற்கையில் அது பயன்படுத்தப்படவில்லை.
னகர மெய்யிறுதி சாரியையின்றி வேற்றுமை உருபேற்கிறது. ‘மரம்’ என்பதற்கு மாறாக ‘மரது’
என்பதே வேற்றுமையுருபேற்கப் பயன்படுத்தப்பட்டது. ‘மரம்’ என்பதனோடு பன்மைக்குரிய ‘கள்’
விகுதி பெற்ற பிற்கால வடிவம் திரிபேதுமின்றி வழங்கப்பட்டது. எனவே உருபுகளோடு கூடிய
பிற்கால வடிவங்கள் உண்மையில் பழைய கட்டு வடிவங்களாகும். தனி வளர்ச்சியுற்ற இடைச்
சொற்களை அவை வேற்றுமையுருபுகளாகப் பெற்றிருந்தன. தொடக்கத்தில் பன்மையில் ரகர மெய்யீறு
இருந்திருக்க வேண்டும். இன்று கூட முன்னிலைப்பன்மை பெயர்ப்பதிலியில் அவ்வாறு உள்ளது
(‘நீவிர்’). பிற்காலத்தில் ரகர மெய்யீறு பலர்பாலைக் குறிப்பதாக வளர்ச்சியுற்றது(அவர்). இவ்வளர்ச்சி நிலைக்கு முன்னர் ரகர மெய்யீறு மிகுதியும் வரும் துகர விகுதியுடன்
சேர்ந்து றுகரமானது. பிற்காலத்திய வடிவமாகிய ‘அவை’ என்பதற்குப்பதில் ‘அவறு’ என்பது பன்மை
காட்டப் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இது ‘அவற்று’ என தனித்து வழங்காத வடிவமாக வழக்கில்
உள்ளது. தமிழில் ‘அவற்று’ என்பது அஃறிணைப்பன்மைக்கு மட்டுமே வழங்குகிறது.
ஆ. முதற் சொல்லின் முடிபாகச்
சாரியை வருதல்
அடைத்தொடர்கள் என்பதைக் குறிக்க வரும் இடைச்சொற்கள் அல்லது உருபுகள் (markers) இடம் பெறும் தொகைகளை இது
|