பக்கம் எண் :

4
 
தமிழ் மொழி வரலாறு

137

4. 0 வேற்றுமைத் தொகைகளும் வேற்றுமை உருபுகளின் வரலாறும்

பயனிலைத் தொடரில் எழுவாய் வேற்றுமை வருகிறது. வேற்றுமை உருபேற்ற வடிவங்களில் சில பெயர்ச்சொற்களுக்கு அடையாகவும் வேறுசில வினைச்சொற்களுக்கு அடையாகவும் வருகின்றன. ஆறாம் வேற்றுமை உண்மையில் அடைத்தொகையின் விரிவேயாகும். ஆறாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமைப் பொருளையும் உடையதாக இருக்கலாம்.

சான்று :

மரத்தினது கிளை

மரக்கிளை <  
 
மரத்தின் கிளை

திசையையோ, நோக்கத்தையோ காட்டத் தொடங்கிய நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் அடையாக இருந்திருக்கக் கூடும்.

சான்று :

புணர்நிலைக்கு (110)
        உரை அசைக்கிளவிக்கு (34)

ஐந்தாம் வேற்றுமை தொடக்கத்தில் ‘அதனிற்பெரிது’ என்ற வாய்பாட்டில் அமைந்து ஒப்புமைப் பொருளில் வந்த ஒன்றாகும். இங்குப் பயனிலையாக அமைவது குறிப்பு வினை அல்லது வினைத்தன்மை பெற்ற பெயராகும். ‘நீங்கற் பொருளைக்’ குறிக்கும் ஐந்தாம் வேற்றுமையும் ஒரு தொகையாகவே முதலில் தொடங்கியது.

சான்று :

மலை வீழருவி (‘மலையினின்றும் வீழும் அருவி’)

கருவிப் பொருள் வேற்றுமையும் ( மூன்றாம் வேற்றுமை ) அடைத்தொடர் ஒன்றின் விரிவாகவே இருக்க முடியும்.

சான்று :

பொன் + வளை > பொன்வளை = பொன்னால் செய்த வளை
        வாள் + வெட்டு > வாள்வெட்டு = வாளால் வெட்டிய வெட்டு

ஒட்டுநிலை மொழிகளில் ஆக்கச் சொற்களும் உண்மையில் பழைய தொகைகளேயாகும். அவற்றில் பல அடைத்தொடர் என்பதை நன்கு காட்டி நிற்கும். தொல்காப்பியர் பெயர்ச் சொல் வேர்களிலிருந்து பிறந்த வியங்கோள் வினைகளை அடைத்தொடர் மூலம் விளக்குகிறார். ஆறாம், ஏழாம் வேற்றுமைகளின் சிறப்பை