தமிழ் மொழி வரலாறு
140
உருபுகளாக
வளர்ச்சியுற்றன என்ற நமது கொள்கையை உறுதிப் படுத்துகிறது.
நான்காம்
வேற்றுமை குகரத்தால் பொதுவாகக் குறிக்கப்பெறும். தொல்காப்பியர் காலத்தில் குகரம்
நான்காம் வேற்றுமை உருபாக முழு வளர்ச்சியுற்றிருக்கவில்லை. அது ஒரு வகையான உரிமை, வரையறை,
எல்லை, முடிவு அல்லது குறிக்கோள் ஆகியவற்றைக் காட்டிற்று. இவ்வாறு இது பொருள்
பெறுதற்குரியானைக் குறிக்கும் பொழுது - அதாவது துணைச் செயப்படுபொருளைக் குறிக்கும் பொழுது -
நான்காம் வேற்றுமையாக வளர்ச்சியுறுகிறது. தொல்காப்பியத்திலும், சங்ககாலத்திலும்
இதுவொன்றே அதனுடைய முக்கியத்துவம் எனக் கருதிவிடக் கூடாது. ஆறாம், ஏழாம் வேற்றுமைப்
பொருள்களையும் அது கொண்டிருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஏழாம் வேற்றுமை
இன்றியமையாத் தன்மையாலும் பல்வேறு இயல்புகளை உடைய தன்மையாலும் ஆரம்பத்திலேயே பல பின்
ஒட்டுக்களைத் தோற்றுவித்தது. அவை அனைத்தும் வேற்றுமை உருபுகள் என்றழைக்கப்படுகின்றன.
ஆனால் உண்மையில் அவையெல்லாம் ஏழாம் வேற்றுமையின் பல்வேறு தன்மைகளின், இடவகைகளின்
பெயர்களேயாகும். ‘பின், முன், மாடு’ என்பன அவற்றில் சில. இச் சொற்களையே வேற்றுமை
உருபுகள் எனக் கருதினாலும், அவற்றின் வேற்றுமை உருபேற்கும் வடிவங்களும் வழங்குவதைக்
காணவேண்டும். ‘செருவகத்து’ என்பதிலுள்ளÊஏழாம் வேற்றுமை உருபான ‘அகம்’ என்பதும் உருபேற்கும்
வடிவத்தைப் பெறுகிறது. எனவே ‘அகம்’ முதலானவை வேற்றுமை உருபுகளன்று; அவை பெயர்ச்சொற்களே
என்பதை இது காட்டுகிறது. ‘அவண், நடுவண்’ போன்ற சொற்களிலுள்ள ‘அண்’ என்னும் இடைச்சொல்
‘அந்த இடம்’ என்பதைக் குறிக்கிறது. யூல்ஸ்பிளாக் கருத்துப்படி ‘அண்’ என்பது குகரத்துடன்
சேர்ந்து (கு + அண்) தொல்காப்பியர் குறிப்பிடும் ஏழாம் வேற்றுமையின் பழைய உருபான ‘கண்’
என்பதைத் தருகிறது. இரட்டை வேற்றுமை உருபுகளுக்கு இது பிறிதொரு சான்றாகும்.
4. 2. இன்
ஐந்தாம் வேற்றுமை உருபு ‘இன்’ என்பதாகும். பின்னர் இது ‘இல்’ என்பதோடு மயங்கியது.
கால்டுவெல் சுட்டிக் காட்டியபடி
|