தமிழ் மொழி வரலாறு
141
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமையாலும் குறிக்கப்படுகிறது. ஆனால் இயல்பு நிலையைக் குறிக்கும் வினையன்றி
இயக்கத்தைக் குறிக்கும் வினை வரும்பொழுது மட்டுமே இங்ஙனம் நிகழ்கிறது. ஆனால்
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் ‘இன்’ என்பது ஒப்புமைப் பொருள் தரும்
வேற்றுமை உருபாக விளங்குகிறது. பின்னர் ஐந்தாம் வேற்றுமையை ‘நீங்கற் பொருளைக்’
குறிக்கும் வண்ணம் தனியே விடுத்து ‘ஒப்புமைப் பொருள் தரும் இடைச் சொல்லாக ‘இன்’
வளர்ச்சியுற்றது. ‘ஒப்புமைப் பொருள் தரும்’ வேற்றுமை உருபாக இருந்தது. பின்னர் தரப்
பொருண்மை கொண்ட ஒப்புமையாக வளர்ச்சியுற்றது. இதை வேறொரு நோக்கில் பார்க்கையில்
வரையறை, எல்லை, புடை பெயரும் நிகழ்ச்சிக்கான தொடக்க இயக்கம் ஆகியவற்றைக்
குறிப்பதாகும். இவ்வாறாக இவ்வுருபு ‘நீங்கற் பொருளோடும்’, தவறாக வைத்தெண்ணப்பட்டது.
4. 3 ஆன்
மூன்றாம்
வேற்றுமை உருபாக வளர்ச்சியுற்ற ‘ஆன்’ ஆரம்பத்தில் ‘அவ்விடம்’ என்னும் பொருளைக்
குறிக்கும் சொல்லாக இருந்தது (717).
‘ஆன்’ என்பது
இடப் பொருளைத் தவிர ஏனைய பொருள்களைப் பெற்று வளர்ச்சியுற்றது. எனவே இது இடப்பொருள்
வேற்றுமையாக வரும்பொழுது, இதைச் சாரியையாகவே தொல்காப்பியர் கருதுகிறார். சான்று :
‘பரணியாற் கொண்டான்.’ இங்கு இட வேற்றுமைப் பொருள் தெளிவாக உள்ளது. பின்னர் ‘ஆன்’
என்பது கருவி வேற்றுமைப் பொருளைப் பெறத் தொடங்கியது. செயல் எக்குறிப்பிட்ட நிலையில்
நடந்தது என்பதைக் குறிக்க அது அவ்வாறு மாறியிருக்கக் கூடும், சான்று : ‘வாளான்
வெட்டினான்.’ ஆங்கிலத்திலுள்ள ‘with’
என்பது கருவிப் பொருளும் உடனிகழ்ச்சிப் பொருளும் பெற்றுள்ளமையை ஒப்பு நோக்கலாம்.
சான்று : |
He came with him.
He came with a sword.
He cut it with his sword. |
தமிழில் ஒருவன்
கருவியோடு வருவது என்பது அவன் அதைப் பயன்படுத்துவதையும் குறிக்கும். சான்று : ‘வாளோடு சண்டை
செய்தான்’. இவ்வாக்கியத்தில் கருவிப்பொருளும்
|