பக்கம் எண் :

கழ
 

தமிழ் மொழி வரலாறு

142

கழ்ச்சிப் பொருளும் உள்ளன. ‘பேனாவும் கையுமாய் எப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிறான்’ என்ற தற்கால மரபுத் தொடரையும் இங்கு ஒப்பு நோக்கலாம். இதுவும் கருவிப் பொருளையும் உடனிகழ்ச்சிப் பொருளையும் உடையதாகும். இம்மரபுத் தொடரானது தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகியவற்றின் அளவுக்குப் பழமை உடையது.

சான்று :

‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’.
‘தூங்கு கையான் ஓங்கு நடைய’.

கருவி வேற்றுமை ‘ஆன்’ உடனிகழ்ச்சி வேற்றுமை ‘ஓடு’ ஆகியவற்றுக்கான நெருக்கமான உறவை இது புலப்படுத்தும். ஓர் உருபு மற்றொன்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது; உண்மையில் இவ்வுருபுகள் ஒவ்வொன்றும் இரண்டு வேற்றுமைகளின் பொருளையும் உணர்த்தத் தொடங்கின. ‘ஆன்’ என்பது ‘காரணப்’ பொருண்மையையும் குறிக்கின்றது.

சான்று :

‘மண்ணான் ஆகிய குடம்’

இங்கு ‘ஆன்’ உருபு மண் எனும் காரண ( கருவி )ச் சொல்லோடு சேர்க்கப்பட்டுள்ளது.

4. 4. ஐ

செயப்படு பொருள் வேற்றுமை அல்லது இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ அஃறிணைச் சொற்களுடன் அருகியே வழங்குகிறது. தமிழில் அஃறிணைப் பெயர்ச் சொல் என்பதாலேயே இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருளை உணர்த்துகிறது என்பதால் உருபைத் தனியே சேர்க்க வேண்டியதில்லை. உயர்திணைச் சொற்கள் இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்கின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகுதியன்று. தமிழில் ஆரம்பத்தில் ‘செய்வினை, செயப்பாட்டுவினை’ ஆகியவற்றுக்கிடையே வேறுபாடு குறிக்கப்படவில்லை; சூழ்நிலையைக் கொண்டே இவ்வேறுபாடு உணரப்பட்டது.

பயனிலையுடன் கூடிய ஒரே தொகுதியாக இரண்டாம் வேற்றுமையைத் தொல்காப்பியர் கருதுவதாக நம்பக் காரணமுள்ளது. பனிலை ‘குறிப்பு வினையாகவோ’ ‘தெரிநிலை வினையாகவோ’ இருக்கக்கூடும். இவ்விரண்டு பயனிலைகட்கு ஏற்ப இரண்டாம் வேற்றுமையை இரண்டாகப் பிரிக்கலாம்.