தமிழ் மொழி வரலாறு
145
அமையவில்லை. பிந்தைய
நிலையில் செய்து கொள்ள வேண்டிய வேறுபாடு ஒன்று உண்டு.
1. எவ்வித
மாற்றமுமின்றி வேற்றுமை உருபை ஏற்கும்
பெயர்ச்சொற்கள்.
இவை எழுவாய் வேற்றுமைக்குள்வரும்.
2. மாற்றத்துக்குப்
பிறகே வேற்றுமை உருபை ஏற்கும்
பெயர்ச்சொற்கள்.
இவை உருபேற்ற வடிவங்களின்
வேற்றுமைக்குள் வரும்.
முதலாவது
பிரிவில் உயர்திணைச் சொற்கள் வரும். பிந்தியதில் அஃறிணைச் சொற்கள் இடம் பெறும்.
தொல்காப்பியத் தமிழுக்கு இது பொருந்துவதாகும்.
5. 0
தொல்காப்பியத்திலுள்ள சில சிறப்பு வழக்காறுகள்
தொல்காப்பியத்திலுள்ள சில சிறப்பு வழக்காறுகளைத் தந்து இப்பகுதியை நிறைவு
செய்யலாம்.
1. வியங்கோள் வினை
படர்க்கைக்கே வரும்.
2. ‘ஒப்புமை’ என்பது
நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை
உரு, மெய், வினை,
பயன் எனப்பெறும். இவை ஒவ்வொன்றுக்கும்தனித்தனி உவமஉருபுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
3. ‘சொல்’, ‘கொடு’
என்னும் வினைகள் படர்க்கைக்கே உரியன.
‘வா’, ‘தா’ என்பன
தன்மைக்கும் முன்னிலைக்குமே உரியன.
|