பக்கம் எண் :

உய
 

தமிழ் மொழி வரலாறு

147

உயிர் மயக்கங்கள் தவிர்க்கப்படல்

உயிரிடை வகர, யகர உடம்படு மெய்கள் மேன் மேலும் வழக்குமிகுதியாகின்றன. இதன் விளைவாக உயிர்மயக்கங்கள் தவிர்க்கப்படுகின்றன.

உருபுகளில் மாற்றங்கள்

இதன் விளைவாக ‘மருவி’1 போன்ற வடிவங்கள், உயிர் மயக்கங்கள் இடம் பெறும் ‘மரீஇ’ போன்ற பழைய வடிவங்களுக்குப் பதிலாக வருகின்றன. யாப்பியல் நோக்கில் உயிர்மயக்கங்கள் ஈரசைகளை உடையதாயிருப்பதற்குப் பதில், மூன்று மாத்திரைகளை அல்லது இன்னும் அதிக அளவுடைய உயிர்த்தொடர்களாகின்றன. இவற்றை அளபெடை (உயிர் அளவு நீட்சியுறல்) என்றழைப்பர்.

நெடில்களிடையே வேற்றுநிலை வழக்கின்மை

அளபெடைகள் நெட்டுயிர்களின் கட்டில்லா உறழ்(ச்சி) ஒலிகளாக வருகின்றன. குற்றுயிர்களும் இங்ஙனம் வரலாம் எனப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் கொள்கின்றனர். ஆனால் ‘எடுப்பதூஉம்’2 என்பதைப் போலக் கொடுக்கப்பெறும் சான்றுகள் உண்மையில் எடுப்பது + உம் என்பது போன்ற பழைய வழக்குகளே. இங்கு உ + உ இணைந்து ஊ உ என்றாகிறது. தமிழ் யாப்பமைப்பினால் சிலவிடங்களில் (எ-டு) நேரசை - குறில் நெடில் உயிர்கள் வரலாமாதலால் அவை வேற்று நிலை வழக்கின்றிய வழக்கில் வருகின்றன. சான்று : ‘ஒடு’ என்பது ‘ஓடு’ என்ற மாற்றுருபைப் பெறுகிறது. பழைய நூல்களைப் பதிப்பவர்கள் உயிர்களுக்கு முன்னர் ‘ஓடு’ என்பதையும் மெய்களுக்கு முன்னர் ‘ஒடு’ என்பதையும் பொதுவாகக் கொள்கின்றனர்.

உயிர் மாற்றம்

அ. எ (கர) > அ (கர) மாற்றமும் அதனால் விளைந்த மாற்றமும்

எகர உயிர் மொழியிறுதியில் வருவதில்லை; மொழிக்கு இடையில் வருவதும் சங்க காலத்தே நின்று விடுகிறது. அங்கு அது அகர
 


1. பரிபாடல், 20-25

“மாட மறுகின் மருவி மறுகுற”.

2. திருக்குறள், 15, 2

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.