தமிழ் மொழி வரலாறு
148
மாகிறது. தன்மை ‘என் > அன்’ ஆகிறது. அதன் பன்மையான
‘எம் > அம்’ ஆவது தொல்காப்பியர் காலத்திலேயே நிகழ்ந்து விட்டது.3
ஒப்புமையாக்கத்தால் தன்மைப் பன்மை விகுதி பலவிடங்களில் ‘-அம்’ என்றாகிறது.4
இது ‘உ > அ’ மாற்றம் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அஃது அவ்வாறன்று.
ஆ. ‘ஊ > ஆ’ மாற்றமும் அதனால்
விளைந்த மாற்றமும்
உயிர்
மயக்கங்கள் வழக்கினின்று மறைந்த பின்னர், அருகிய வழக்குடைய ஊகார இறுதியை உடைய
‘செய்யூ’ என்னும் இறந்தகால வடிவம் ‘செய்யா’ என்றாகிறது;5 ஏனெனில் ஆகாரமே
இத்தகைய இடங்களில் மிகுதியும் வரும் உயிராகும். இது ஒரு குறிப்பிட்ட போக்கினைப்
பின்பற்றும் முறையேயன்றி ஒலிமாற்றமன்று. ‘செய்யூஉ
~
செய்யூ’ என்பது ‘தழூஉ’ (தொழிற்பெயர்) என்பதோடு ஒப்பிடத்தக்கதாகும். தொடக்கத்தில்
இது உண்மையில் பெயர்ப் பயனிலையாக இருந்திருக்கலாம். ‘செய்து’ என்பதின் மாற்றான
‘செய்யூ’ என்பது ‘செய் + உ’ என்றும் இருக்கலாம். இங்குச் சொல்லாக்க விகுதியான உகரம்
துகரத்தின் மாற்றாக இருக்கலாம். ‘கண்டு’ என்பது ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வடிவமாகும்.
‘காணூஉ’ என்பது ‘செய்யூஉ’ என்னும் வாய்பாட்டு வடிவமாகும். இத்தகைய வேறுபாடுகள்
சிலவற்றில் காணப்பெறுகின்றன.
3.
தொல்காப்பியம், 687
“அவைதாம்
அம் ஆம் எம்
ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு
வரூஉங் கடதற என்னும்
அந்நாற்
கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை
உரைக்குந் தன்மைச் சொல்லே”.
பதிற்றுப்பத்து 23,
11
“நின்னயத்து வடிவேல்
கண்டனம் புல்மிக்கு”. . .
4.
குறுந்தொகை, 219, 4
“ஆங்கட்
செல்கம் எழுகென ஈங்கே”.
5.
அகநானூறு, 16, 15
நாணி
நின்றோள். . .”
. .
.“நிலங்கிளையா.
|
|