|
தமிழ் மொழி வரலாறு 15
3. 10 கிளை மொழிகள்
தற்காலக் கிளை
மொழிகளைப் பற்றிய ஆய்வுகள், தற்காலப் பேச்சு மொழியின் அடிப்படை இயல்புகளைக்
காட்டுவதுடன், பழைய வழக்காறுகளையும் வெளிக் கொணர்கின்றன. திருநெல்வேலிக் கிளை
மொழியில் உள்ள முன்னிலைப் பன்மை வடிவமான ‘நீம்’, குரல்வளை வெடிப்பொலி
(
glottal
stop) உச்சரிக்கப்படுதல் போன்றவற்றைச் சான்றாகக்
காட்டலாம். பல பொருள் குறிக்க ஒரு சொல் வருவதன் விளைவான ‘மொழி இயல் நோயைத்’
(
linguistic
pathology) தீர்க்கக் கிளை மொழிகள் வழி முறைகளைப்
பெற்றுள்ளன. சான்று : ‘உத்தரம்’ எனும் சொல் ‘உத்தரக்கட்டை’, ‘பதில் அல்லது அனுமதி’
ஆகிய இருபொருளைக் குறித்தது. பின்னர் இரண்டாவது பொருளைக் குறிக்க, ‘உத்தாரம்’ என்ற
சொல் தோன்றியது.
3. 11 ஒப்பியல் முறை
இறுதியாகத் திராவிட
மொழிக் குடும்பத்தை ஆராய மொழி இயலார் பயன்படுத்தும் ஒப்பியல் முறையைக் குறிக்க
வேண்டும். இந்தோ - ஐரோப்பிய மொழி ஒப்பியல் ஆய்வு அடைந்துள்ள அளவு வளர்ச்சியையும்
முதிர்ச்சியையும் திராவிட மொழி ஒப்பியல் ஆய்வு இன்னும் அடையவில்லை. இன்றுள்ள நிலையில்
ரோமன்ஸ் மொழி17
(
Romance Languages)
ஒப்பியல் ஆய்வு அடைந்துள்ள வளர்ச்சி நிலையிலேயே திராவிட மொழி ஒப்பியல் ஆய்வும்
உள்ளது. இதனால் திராவிட மொழிகளின் ‘மூல-மொழியை’ (Proto-language)
இந்தோ-ஐரோப்பிய மொழி ஒப்பியல் ஆராய்ச்சியில் உள்ளதுபோல, மிகப் பழைய
காலத்திற்குக் கொண்டு சென்று ஆராய முடியாது. எனவே புதிய ஆராய்ச்சி முறைகள் வகுக்கப்பட்டுச்
செம்மைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த எமனோ
(M. B. Emeneau) இங்கிலாந்தைச் சேர்ந்த பர்ரோ
|
17.
“லத்தீன் மொழியிலிருந்து கிளைத்தெழுந்த பிரெஞ்சு, ஸ்பானிஷ்,
இத்தாலியன்,
போர்ச்சுகீஸ் போன்ற மொழிகள் ரோமான்ஸ்
குடும்பமொழிகளாகும். இம்
மொழிக்
குடும்பம் இந்தோ-ஐரோப்பிய மொழிக்
குடும்பத்திலிருந்து பிரிந்ததாகக் கொள்ளப்படும்”
Mario Pei:
Glossary of Linguistic Terminology, p
236, 1966.
|
|