தமிழ் மொழி வரலாறு 16
(T. Burrow
) போன்ற மேலை நாட்டவர்கள் இந்த ஆய்வில் மிகுந்த ஆர்வம்
காட்டி உள்ளனர். அவர்களின்
வழிகாட்டுதலுடன் தென்னக அறிஞர்கள் பலர்
இத்துறையில் நற்பணி ஆற்றியுள்ளதையும் நினைவு கூர
வேண்டும். திராவிட
மொழிகளின் அடிச் சொல்
அகராதி (
Dravidian
Etymological Dictionary) இதுவரை
நிகழ்ந்த திராவிட மொழி
ஆய்வுகளின் மொத்த விளைவென்றே சொல்ல வேண்டும்.
இவ் அரிய களஞ்சியத்தைப் பயன்படுத்தி தமிழ்ச்சொற்களை அவற்றிற்கு இனமாக
உள்ள பிற திராவிட மொழிச்
சொற்களோடு ஒப்பிட்டு ஆராய எனக்கு இங்கு
போதிய வாய்ப்பில்லை.
அத்தகைய ஆய்வு தமிழ் வடிவங்களின் வரலாற்றை
விளக்கப் பெரிதும் உதவும்
என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
|