தமிழ் மொழி வரலாறு 17
2.மூலத் திராவிட மொழி
1. 0 திராவிட மொழி
ஆராய்ச்சியின் வரலாறு
ஒரே குடும்ப மொழிகளை ஆராய்தல் என்ற அடிப்படையில் திராவிட
மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது எனக்கூற
முடியவில்லை. குமரில பட்டரின் ‘தந்திர வார்த்திகா’வில் பிழையான பாடத்தின்
அடிப்படையில் கால்டுவெல், ‘ஆந்திர திராவிட’ என்ற சொல்லைத் தெலுங்கு, தமிழ்
மொழிகளைக் குறிக்கும் நோக்கத்தில் குமரில பட்டர் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்.1
அச்சொல் உண்மையில் ‘திராவிட ஆந்திரா’ அன்று; மாறாகத் ‘திராவிட ஆதி’(
Drordi.ltvida
ordi.ltdi
= திராவிட முதலியன) என்பதேயாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த
எல்லீஸ் என்பவர், தமது கட்டுரைகளில் (இவற்றில் ஒன்று 1816 ஆம் ஆண்டில் ஆர்டென்
(
Arden) என்பாரின் ‘தெலுங்கு இலக்கணம்’ (
Telugu Grammar)
என்ற நூலின் முதற்பதிப்பில் வெளியானது) மிக நெருங்கிய உறவுடைய ஒரு குழுவாக அமையும் முறையில்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைச்
சுட்டிக்காட்டினார். கால்டுவெல் 1856 ஆம் ஆண்டில் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”
என்னும் தமது சிறப்புமிக்க நூலை வெளியிட்டுத் திராவிடமொழி ஒப்பியல் ஆய்வுத் துறைக்கு
வலுவானதொரு அடிப்படையை அமைத்தார். இந்திய விடுதலைப் போரின் எனக் கூறப்படும்
“சிப்பாய்க் கலகம்” தொடங்கிய அதே ஆண்டில் தான் இந்நூல் வெளியானது என்பது
அறிதற்குரியது. யூல் ப்ளாக்
1.
R. Caldwell :
A Comparative Grammar of
the Dravidian Languages, p
4.
|
|