தமிழ் மொழி வரலாறு 18
சுட்டிக்காட்டுவது போல, இந்தோ
- ஐரோப்பிய மொழிகள் அல்லாத ஏனைய உலக மொழிகளிலும் திராவிட மொழிகள் அல்லாத ஏனைய
இந்திய மொழிகளிலும் இத்தகைய ஒப்பியல் ஆய்வுகள் தொடங்கியிராத காலம் அது.2
இந்தோ - ஐரோப்பிய
மொழி ஆராய்ச்சியைப் பொறுத்த அளவிலும் அறிஞர்களான பாப்
( Bopp), கிரிம்
(
Grimm) முதலானோர்கள் கால்டுவெல்
ஒப்பிலக்கணத்தை எழுதிய காலத்தில் உயிரோடிருந்தவர்களே. கால்டுவெல்லின் நூல்
வெளியாவதற்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்குள்தான் ஸ்லாவ் (
Slav), கெல்டிக் (
Celtic) மொழிகளின் இலக்கணம்
வெளியாயிற்று. கால்டுவெல்லின் நூல் வெளியான அதே ஆண்டில் ஷ்லைசர்
(
Schleicher) எழுதிய லத்துவேனிய (
Lathuania) மொழி இலக்கண
நூலும் வெளியானது. புத்திலக்கண ஆசிரியர்கள் ஆராய்ச்சி அரங்கில் வரத் தொடங்காத காலம்
அது. எனவே, இத்தகைய சூழ்நிலையில் கால்டுவெல் எழுதிய இந்த நூலின் பெருமையைக் குறைத்துக் கூற
முடியாது. அவர் காலத்தில் ஒலியியல் துறை வளர்ச்சியுற்றிருக்கவில்லை. கால்டுவெல்லின்
ஒப்பிலக்கண ஆராய்ச்சி, அக்காலத்தில் அறியப்பட்ட எல்லாத் திராவிட மொழிகளையும்
கருத்திற் கொண்டதெனினும், அடிப்படையில் அது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய
நான்கு திருந்திய திராவிட மொழிகளை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். அக்காலத்தில் ஏனைய
மொழிகளைப் பற்றிய ஆய்வுக்குரிய செய்திகள் குறைவே. ஆகையால் கால்டுவெல்லின் நூலை,
தெலுங்கினை உள்ளடக்கிய நான்கு ‘தென் திராவிட மொழிகளின்’ ஒப்பிலக்கணம் என்றே
கூறலாம். ‘உலகு படைக்கப்பட்ட நாளில் ஒரே மொழிதான் இருந்தது’ என்ற விவிலிய நூலின்
கருத்தை நிறுவுவதற்காக இந்நூலின் பெரும்பகுதி திராவிட மொழிகளைப் பிற குடும்ப மொழிகளுடன்
ஒப்பிட்டுக் காட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சொற்களின் தொன்மையும்
தூய்மையும் கால்டுவெல்லைப் பெரிதும் கவர்ந்திருக்கலாம். எனவே பழமையானவை என இன்று
கருதப்படும் பிற திராவிட மொழிச் சொற்களுக்குப் பதில் தமிழ்ச்சொற்களே பழமையானவை
எனக் காட்ட அவர் விழைந்தார் எனக்கருதலாம்.
2.
Jules Bloch :
The Grammatical Structure of Dravidian Languages
[English
translation],Poona, pp. xxviii- xxix.
|
|