பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

19

கால்டுவெல்லின் நூல் வெளியாகி நூறாண்டுகளுக்கு ஆகிவிட்டது; ஆனால் இப்புதிய துறையில் முதலடி எடுத்து வைத்த இம்முன்னோடியின் பணிகள் இன்றளவும் நிலைத்துள்ளன. இதற்குப் பின்னர் நடைபெற்ற பணிகளில் “இந்திய மொழிகளின் கணக்கீடு”( Linguistic Survey of India) ஒரு பெரும் முயற்சியாகும். முண்டா மொழிகள் திராவிட மொழிகள் பற்றி ஸ்டென்நோவ் ( Sten Konow) அவர்களால் தயாரிக்கப்பட்ட, “இந்திய மொழிகளின் கணக்கீட்”டின் நான்காவது தொகுதி விரிவான ஆய்வின் முடிவன்று. இந்திய அறிஞர்கள் சிலரும் திராவிடமொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில் காலஞ்சென்ற திரு L. V. இராமசுவாமி ஐயரவர்களே மிகுதியும் எழுதியவர். யூல்ஸ் ப்ளாக்கின் “திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு” ( Grammatical Structure of the Dravidian Languages) என்னும் நூல் 1946 ஆம் அண்டில் வெளியானது. ‘கோலாமி’ ( Kolami) மொழிபற்றிய தமது நூலில் எமனோ, கோலாமி மொழிச் சொற்பட்டியல் ஒன்றைத் தந்து அதனுடன் பிற திராவிட மொழிச் சொற்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். எமனோவும் பர்ரோவும் வெளியிட்டுள்ள “திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி” திராவிடமொழி ஒப்பியல் ஆய்விற்கு மிகவும் முக்கியமானது என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பல்வேறு அடிப்படைச் சான்றுகளிலிருந்து கிடைக்கும் மூலங்களைச் ( material) சோதித்துச் சரிபார்த்து, பகுத்து, ஆய்வு நடத்தி, திருத்தித் தொகுத்துத் தரப்பட்டுள்ள ஒரே நூல் என்ற வகையில் இந்நூல் மிகவும் சிறப்புடையது. இவ்வகராதியின் மற்றொரு பதிப்பாசிரியரான பர்ரோ “கீழ்த்திசை, ஆப்பிரிக்கா தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தின் இதழில்” ( Bulletin of the School of Oriental and African Studies) வரலாற்றுச் சிறப்புடைய திராவிட மொழி ஒப்பியல் ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் நிரம்பப்பணி செய்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இவ்விரு அறிஞர்களின் கீழ் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் பர்ரோவுடன் உழைத்த இந்திய அரசு மானிடவியல் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த திரு. பட்டாச்சாரியாவை மறக்க முடியாது. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் எனது மேற்பார்வையின் கீழ்ப் பல மாணவர்கள் ஏழாம் நூற்றாண்டு, அதற்குப் பிந்திய நூற்றாண்டுகளின் கல்வெட்டுக்களின் மொழி பற்றியும், தமிழ் இலக்கியங்களின்