பக்கம் எண் :

New Page 1

தமிழ் மொழி வரலாறு


20

மொழி பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.3 என்றாலும் இப்பணிகள் இன்னும் முடிவுறவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மொழியியல் துறை பேச்சு மொழி பற்றியும் கிளைமொழிகள் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. பேச்சுமொழி பற்றிய ஆராய்ச்சி ஒன்று முன்னரே முடிவடைந்து உள்ளது.

1. 0 திராவிட மொழிகளின் எண்ணிக்கையும் அவை வழங்குமிடங்களும்

திராவிட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என அறியும் முன்னரே மேலை நாட்டவர் அம்மொழிகளை ஆராய்ந்துள்ளனர். திருந்திய திராவிட மொழிகளின் ஆராய்ச்சி குறித்து முன்னரே குறிப்பிடப்பட்டது. ஏனைய திராவிட மொழிகளைப் பொறுத்த அளவில் கூர்க், துளு ஆகிய மொழிகளை முன்னரே அறிந்திருந்தனர். 1798 ஆம் ஆண்டிலேயே ராபர்ட்ஸ் என்பவர் அவை பற்றிய சில செய்திகளைத் தந்துள்ளார்.4 1837 ஆம் அண்டில் தோதர் மொழி அறியப்பட்டது.5 1838 ஆம் ஆண்டில் பிராகூய் மொழி கண்டறியப்பட்டது.6 1849 ஆம் ஆண்டில் கோண்டிமொழி



3. V. Jayakumari :

A study of the Language of Tamil inscriptions from Seventh Century up to the middle of the Eleventh Century A. D. ;

S. Baghirathi :

The Language of the Tamil Inscriptions (950-1250 A. D.);

Thananjayaraja Singam :

Language of some Ceylon Dutch Documents;

Seethabai :

A study of Index Verborum of Tolkappiyam ;

Sadhasivam :  

A Study of inkurunaru

S. N. Kandasami :

Linguistic Study of Paripatal ;

Parameswari :

Language of Tirukkural ;

Kamatchi Srinivasan :

Language of Iraiyanar Akapporul Urai

4. R. E. Roberts :

Asiatic Researches, 5-127-30 [1798 A. D.]

5.Bernhard Schmid :

“On the dialects of the Todavers the aborigines of the Neelgerries, Madras”Journal of Letters and Science V, p p 155-158

6. R. Leech :

“Emotome of the grammar of the Brahuiky”, Journal of the Asiatic Society, Bengal, Vol. VII, p p 538