பக்கம் எண் :

கண

தமிழ் மொழி வரலாறு


21

கண்டறியப்பட்டது.7 1853 ஆத் ஆண்டில் லெட்சுமாஜி (Letch-majee) என்பவர் கூய் மொழிக்கு இலக்கணம் ஒன்றை வெளியின்னார்.8 கோலாமி மொழி 1866 ஆம் ஆண்டிலும்9 மால்டோ மொழி 1884 ஆம் ஆண்டிலும் அறியப்பட்டன.10 பார்ஜி மொழி பற்றியும், பிற திராவிட மொழிகள்பற்றியும் “இந்திய மொழிகளின் கணக்கீடு” குறிப்பிடுகிறது. கோண்டாவும் கதபாவும் 1956 ஆம் ஆண்டில் அறியப்பட்டன. குறவா (Kurava) என்றும் எருக்கலா (Erukala) என்றும் வழங்கப்படும் ‘இருளா’ என்னும் கிளைமொழி திராவிடமொழிகளைச் சேர்ந்த கிளை மொழியாக இப்போது கருதப்படுகிறது.

1961 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்புப்படி, பல்வேறு திராவிடக் குடும்ப மொழிகளைப் பேசுவோரின் தொகை வருமாறு.* பேசுவோர்களின் எண்ணிக்கை பேரெண் அளவில் தரப்பெற்றுள்ளன.

1. தெலுங்கு 3.767 கோடி
2. தமிழ் 3.056 கோடி
3. கன்னடம் 1.742 கோடி
4. மலையாளம் 1.701 கோடி
5. கோண்டி (Gondi) 15 லட்சம்
6. குருக் அல்லது ஒரான் 11.4 லட்சம்

 


7. Rev. J. G. Driberg and H. J Harrison :

   “Narrative of the second visit to the Gonds of the Nurbudda territory with a grammar and vocabulary of their language”, Calcutta, 1849

8.Lingum Lecthmajee :

   “An Introduction to the Grammar of Kui,”Calcutta Christian Observer, May and June 1853

9. S. Hislop :

   “Papers relating to the Aboriginal tribes of the Central Provinces”, Nagpur, 1866.

10. E. Droesf :

Introduction to Malto language, Agra, 1884.

T. A. Sebeok (Ed):

   Current Trends in Linguistics, Vol. V “Linguistics in South Asia” p p 309-310, 1969.
(பாடகா, இருளா, குறவா ஆகிய மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பில் உள்ளபடி தரப்பட்டுள்ளது.)