பக்கம் எண் :

ஆன
 

தமிழ் மொழி வரலாறு

151

ஆன் > ஆல் ஆகிறது.16 ஐந்தாம் வேற்றுமை உருபான ‘இன் > இல்’ ஆகிறது. ‘வேண் > வேள்’ ஆகிறது.17 ஆனால் இலக்கிய மொழியில் பழைய இறுதி மூக்கொலிகள் பேணப்பட்டுள்ளன.

மூக்குச் சாயல் பெறுதல்

‘அங்ஙனம்’ என்பது சில சமயங்களில் ‘இங்ஙனம்’ என எழுதப்படுகிறது. தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் கூட இவ்வடிவம் புகுந்து விட்டது. இம்மாற்றம் சங்ககாலத்திலேயே ஏற்பட்டது என்று ஒப்புக்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

மெய் மயக்கங்கள் : மொழியிறுதியில் ‘ன்ம்’ வரும்சொற்கள் மேலும் சில

மெல்லின மெய்மயக்கமுடைய ஒரே ஒரு சொல்லையே தொல்காப்பியர் குறிக்கிறார். ‘போன்ம்’ என்பது அச்சொல்லாகும். இது ‘போலும்’ என்னும் சொல்லிற்குப் பதில் வருவதாகும். சங்க காலத்தில் மெல்லின மெய் மயக்கமுடைய வேறு சில சொற்கள் வருகின்றன.

சான்று:

மருண்ம்18
         
கேண்ம்19
         
சென்ம்20

இவை ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வடிவங்களாகும். இவை வினைமுற்றாக வருகின்றன. மொழிக்கு இடையில் சிலவிடங்களில் உகரம் மறையலாம் எனத் தொல்காப்பியரே கூறுகிறார். ஆனால் இவ்விதியை பெயரெச்சங்களுக்கு மட்டுமே
 


16. திருக்குறள் 101

“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”.

17. புறநானூறு 201, 12

“வேளிருள்வேளே! விறற் போர் அண்ணல்”.

18. தொல்காப்பியம், 52 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.

19. தொல்காப்பியம், 52 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.
 20. புறநானூறு 133, 7

“தேர் வேள் ஆயைக் காணிய சென்மே”.