155
ஈ. பிறவினை விகுதியா?
இறந்த காலம் காட்டும் இடைநிலையா?
பகர அல்லது மகர
மெய்க்குப் பின்னர் வரும் இகரம் ஈரேவல் விகுதியாக உணரப்பட்டுள்ளது. ‘இரீஇ’25
என்பது போன்ற வடிவங்களில் இகரம் பிறவினை விகுதியாக வருகிறது. இவ் இகரத்துக்கு
இறந்தகாலம், பிறவினை ஆகிய இரண்டையும் குறிக்கும் சிறப்பு உண்டு. சூழல் (Context)
காரணமாக ஈரேவல் வினையைக் குறிக்கும் தன்மையையும் அது பெற்றுள்ளது எனலாம். அல்லது இரு
இகரங்கள் இருந்து பின்னர் அதில் ஒன்று ‘அசைகெடலால்’ (Haplology) கெட்டிருக்கலாம். இகரத்தைப் பெற்றுள்ள எல்லாச் ‘செய்து’ என்னும் வாய்பாட்டு
வினையெச்சங்களிலும், இகரம் ஈரேவல் வினையைக் குறிப்பதில்லை. சான்று : மரீஇ26.
ஈரேவல்வினை
தொல்காப்பியத்தில்
ஈரேவல் வினை இடம் பெற்றுள்ளது; ஆனால் ஒரே ஒருமுறைதான் வருகிறது. சங்க இலக்கியத்தில்
மிகுதியும் வருகிறது. சான்று : போர்ப்பித்திலதே.27
கலித்தொகையில் இதன் வருகை மிகுதி.
2. 2 முற்றுக்கள்
அ. தன்மை
கு, து
~
டு, கும், தம் ~
றும்
~
டும் முதலிய தன்மை
முற்று விகுதிகள் மெல்ல மறையத் தொடங்கின. ‘அம் > ஒம்’ என்றாகிறது. அகரம் மகர
மெய்யால் ‘இதழ்ச்சாயல்’ பெற்று ஒகரமாகிறது. ‘அம்’ வருவது குறைகிறது. ‘எம்’ என்பதும்
அங்ஙனமேயாகும். ‘என்’ வருமிடங்களில் ‘அன்’ வருகிறது. இளம்பூரணர் இதைப் புதிய வடிவம்
என்கிறார்.28
ஆனால் இவ்வடிவம் புறநானூற்றில் காணப்படுகிறது.29
எனவே, அன் என்பதன் வழக்கு மிகுதியே புதுமை
25.
புறநானூறு, 18, 5
“ஒன்று பத்து
அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக”.
26.
தொல்காப்பியம்.
27.
புறநானூறு 286, 5
“தூ வெள் அறுவை
போர்ப்பித்திலதே!”
28.
தொல்காப்பியம், 688 ஆவது
நூற்பா, இளம்பூரணர் உரை.
29.
புறநானூறு 136, 5
.“அனைத்து
உரைத்தனன் யான் ஆக. . .”
|
|