பக்கம் எண் :

2
 

தமிழ் மொழி வரலாறு

157

2. ‘வந்தவன்’ என்பது வினையாலணையும் பெயராக மிகுதியும் பயன்படுகிறது; அகர விகுதியை இவ்வடிவம் பேணிக் காத்துள்ளது. இதில் வகர உடம்படு மெய் இடம் பெற்றுள்ளது. முன்னிலையான ‘வந்த + அய்’ என்பது உடம்படுமெய்யைப் பெற்று ‘வந்தவை’ என்றாகவேண்டும். ஆனால் பரிபாடல் நீங்கலாக ஏனையவற்றில் இவ்வடிவம் காணப்படவில்லை. சான்று: அட்டவை33 (‘நீ கொன்றாய்’), கொடியவை34 (‘நீ கொடியை’). இஃது அந்நூலின் தனிச் சிறப்புக் கூறாகும்.

இத்தகைய வாய்பாடுடைய முன்னிலை ஒருமை இந்நூலுக்கு முந்திய நூல்களிலோ, பிந்திய நூல்களிலோ இடம் பெறவில்லை. இதே வடிவம் படர்க்கை அஃறிணைப் பன்மைச் சொல்லாகிய ‘வந்தவை’ என்பது போலவே இருப்பதால் ஏற்படும் ‘ஒருசொல் பல பொருள்’ மயக்கமானது, இவ்வடிவத்தை வழக்கில் தொடர்ந்து வரவிடவில்லை எனலாம். ஏவலில் மரியாதைப் பன்மை என்பது வேர்களுடன் உம் விகுதியைச் சேர்ப்பதால் காட்டப்படுகிறது. சான்று: வளரும்35, கொள்ளும்.36

இ. வியங்கோள்

வியங்கோள் வடிவங்களான ‘வாழிய’, ‘வாழி’ என்ற வழக்காறுகட்குப் பதிலாக ‘வாழ்க’37 என்பது வழக்குப் பெறுகிறது. வியங்கோள் எல்லா இடங்களுக்கும் எண்களுக்கும் பொதுவாகிறது.38


v 33. பரிபாடல், 21, 66

. . .“மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை. . .”

34. பரிபாடல், 15, 56

. . .“புள்ளணி பொலங் கொடியவை. . .”

35. பரிபாடல், 14, 9

. . .“நீடன்மின், வாரூம் என்பவர் சொற்போன்றனவே. . .”

36. கலித்தொகை.

37. புறநானூறு, 101, 10

“வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே!”

38. புறநானூறு, 103, 12

. . .“புரத்தல் வல்லன்; வாழ்க அவன் தாளே”!