தமிழ் மொழி வரலாறு
158
அது மரியாதை ஏவலாகவும் ஆகிறது. வாழ்த்து,39
வேண்டுதல்,40
பழித்தல்,41
ஆகிய பொருள்களுக்கு அது வருகிறது. சங்க காலத்திலும்42
திருக்குறளிலும்43
எதிர்மறை வியங்கோளுக்கு ‘அல்’ விகுதி வருகிறது. ஆனால் பிற்காலத்தில் இது
காணப்படவில்லை.
ஈ. படர்க்கை : பழைய
வடிவங்கள் மறைதல்
பலர்பாலுக்குரிய
‘செய்ப’ என்பதன் வழக்காறு மிகவும் குறைகிறது. ‘செய்ம்மனார்’, ‘என்மார்’ என்பன
மறைகின்றன. ‘செய்யுமார்’ முதலான வடிவங்கள் ‘செய்வார்’ போன்ற வடிவங்களுக்கு இடம்
தருகின்றன.
அஃறிணை
அஃறிணையில் வினைமுற்றில் கூட ஒருமையும் பன்மையும்
வேறுபடுத்தப்படுவது குறைகிறது. இதற்குச் ‘செய்யும்’ வடிவம் ஏற்றதாகும். இதன் காரணமாகப்
பன்மையான ‘எல்லாம்’ என்பது ‘முழுமையைக்குறித்தல்’ என்னும் பொருளில் ஒன்றன்பாலுக்கும்
வருகிறது.44
தன்மையில் அதனது வழக்காறு மறைகிறது. பிறவிடங்களில் ‘எல்லாம்’ என்பது அஃறிணைக்கே என்ற
நிலை மாறுகிறது. புறநானூற்றில் கூட அது பலர்பாலுக்கு வருகிறது. சான்று: சான்றோர் + எல்லாம்.45
இத்தகைய
வழக்குகள் மிகுதியாகின்றன. இதே போல உண்டு என்பதும் எல்லா இடங்களுக்கும் பால்களுக்கும்
பொது
39.
Ibid.
40.
அகநானூறு, 54, 6
“கடவுக,
காண்குவன் - பாக!”
41.
புறநானூறு, 196.
42.
தொல்காப்பியம், 496
“செப்பும்
வினாவும் வழா அல் ஓம்பல்”.
43.
திருக்குறள், 196
“பயனில்சொற்
பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி
எனல்”.
44.
அகநானூறு, 273, 16
. . .“நின்
வரை எல்லாம் நிழற்றி”. . .
45.
புறநானூறு, 63, 5
. . .“தேர் தர
வந்த சான்றோர் எல்லாம்”. . .
|
|