பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

161

ஆ. செயின்

‘செயின்’ என்பது நிபந்தனையைக் காட்டும் பழைய வினையெச்ச வாய்பாடாகும். பின்னர் அது ‘செயில்’ என்றாகியது. திருக்குறளிலேயே இது நேர்ந்து விட்டது.57 ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ‘ஆல்’ விகுதி பெற்று நிபந்தனை வினையெச்சமாக வருகிறது. சான்று : செய்தால்.58 ‘செய்யும்’ என்பது ஆயின் அல்லது ஏல்59 என்பதுடன் சேர்ந்து நிபந்தனையைக் காட்டுகிறது. இதைப் போலப் பெயரெச்சங்களுடன் ‘கால்’ விகுதி சேர, அவை நிபந்தனையைக் காட்டுகின்றன.60 இறுதியாகக் கூறப்பட்ட வழக்காறு

தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது.61 -ப்ப்- என்பதற்குப் பதில் அதன் மாற்று வடிவம் வருகிறது. சான்று: கேட்பின் > கேட்கின்.62

எதிர்காலத்தைக் குறிக்கும் எச்சமாகிய ‘செய்பு’ மெல்ல மறைகிறது. ‘செய்பான் ~ செய்வான்’, ‘செய்பாக்கு’ போன்றவை நோக்கத்தைக் காட்டவருகின்றன. ‘செய்பான்’ என்பது தொழிற்பெயராக இருக்கலாம். ‘செய்பு + ஆன்’ என அதைப் பிரிக்கலாம். ‘ஆன்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபாகும்; அல்லது காரண விகுதியாகும். பின்னர் ‘நோக்கப் பொருளைத்’ தெளிவு


57. திருக்குறள்.
58. திருக்குறள், 943

“அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றால் நெடிதுய்க்கு மாறு.”

59. திருக்குறள், 18

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்கு வானோர்க்கும் ஈண்டு.”

60. திருக்குறள், 127

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”

61. தொல்காப்பியம், 713.

62. ஐங்குறுநூறு, 84, 1

“செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்”.

ஐங்குறுநூறு, 84, 1

“மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே”.

ஐங்குறுநூறு, 84, 1

“மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே”.