தமிழ் மொழி வரலாறு 162
படுத்தக் குகர விகுதி
சேர்க்கப்பட்டிருக்கலாம். ‘செய்பான் + கு > * செய்பாற்கு’. ஓரினமாதலின் விளைவாகச்
‘செய்பாக்கு’ என்ற வடிவம் கிடைக்கிறது. கலித்தொகை,63
பரிபாடல்,64
திருக்குறள்65
ஆகியவற்றில் ‘செய்வான்’ என்ற வடிவம் வருகிறது. செய்பாக்கு என்ற வடிவம் திருக்குறளில்
மட்டுமே வருகிறது.66
இது கிளை மொழி வழக்காக இருந்திருக்கக் கூடும். ‘செய்வான்’ மலையாளத்தில் தொடர்ந்து
இன்றும் வழக்கில் உள்ளது; ஆனால் தமிழில் வழக்கில் இல்லை.
இ. நோக்கத்தைக் காட்டும்
வினையெச்சம்
‘செய்யிய’ என்பது நோக்கத்தைக் காட்டும் பழைய
வினையெச்ச வாய்பாடாகும். இது மறைந்து, ‘செய்’ என்னும் வினையெச்சம் புறநானூற்றில் இதனது
பொருளைத் தருகிறது.67
2. 4 துணைவினைகள்
அ. ‘செய’ என்னும்
வாய்பாட்டு வினையெச்சம்
‘செய’
என்னும் வடிவம் வளர்ச்சியுற்றது. ‘நான் செய வேண்டும்’ என்பது போன்ற வாக்கியங்களில்
அது எழுவாயானது. இத் தொடருக்கு இரு எழுவாய்கள் இருக்கலாம். ஒன்று ‘செய’ என்பதற்கு; மற்றது
‘வேண்டும்’ என்பதற்கு. ‘செய’ என்பது ‘வேண்டும்’
63.
கலித்தொகை, 113, 13
“ஏதமன்
றெல்லை வருவான் வீடு”
கலித்தொகை,
97, 7
. .
.“முத்தேர் முறுவலாய் நம்வலைப் பட்டதோர்
புத்தியானை
வந்தது காண்பான் யான் தங்கினேன்.”
64.
பரிபாடல், 10, 9
“புனல்மண்டி யாடல்
புரிவான் சனமண்டி”.
65.
திருக்குறள், 1029
“இடும்பைக்கே
கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.”
66.
திருக்குறள், 1128
“நெஞ்சத்தார் காதல வராக வெய்துண்டல்
அஞ்சுதும்
வேபாக் கறிந்து.”
67.
புறநானூறு, 63.
|
|