|
தமிழ் மொழி வரலாறு 163
என்பது போன்ற
சொற்களுடன் ஒன்றுபடுகிறது. ‘வேண்டும்’ என்பது விருப்பத்தைக்காட்டும் விகுதியாகச்
சுருக்கப்படுகிறது. ‘படும்’, ‘தகும்’ என்பன இதே போலச் ‘செய’ என்பதுடன் வரும் பொழுது முறையே
‘தகுதிப் பொருளையும்’, ‘தொனிப்பொருளையும்’ உணர்த்துகின்றன. பின்னர் ‘வேண்டும்’ என்பது
மட்டுமே தகுதிப் பொருளை உணர்த்த நின்றது. சான்று : அவன் வரவேண்டும்.
‘படு’ என்பது
செயப்பாட்டு வினை விகுதியாக வளர்ச்சியுற்றது. ‘தகும்’ என்பது இலக்கிய மொழியில் மட்டுமே
காணப்படுகிறது.
ஆ. செயப்பாட்டு வினை
‘செய’ என்பது
முதலில் வினையெச்சமாக, ‘படும்’ என்பது போல வினையடையாக, வளர்ச்சியுற்றிருக்க வேண்டும்.
சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் செல்வாக்கால் தமிழில் செயப்பாட்டு வினை
வளர்ச்சியுற்றது. ‘செய’ என்னும் வினையெச்சம் வேராகவே கருதப்படுகிறது. ‘படு’ என்பது
செயப்பாட்டு வினை விகுதியாகிறது. ‘கைப்பட்டாய்’ என்பதற்குப் பதில்
‘கைப்படுக்கப்பட்டாய்’ என்ற வடிவம் கலித்தொகையில் வருகிறது.68
செயப்பாட்டு வினைவடிவம் வருவதற்கு இது திட்டவட்டமான சான்றாகும். ‘உண்’ என்பது செய்யுளில்
செயப்பாட்டு வினை விகுதியாக வருகிறது.69
ஆனால் இதற்கு முன்னால் ‘செய’ என்னும் வடிவம் வருவதில்லை; வேரே வருகின்றது. சான்று: ‘கொல்
- உண்டான்’. ‘படு’ என்பதும் இங்ஙனம் வரலாம்; ‘கொல்லப்பட்டான்’ என்பதற்குப் பதில்
‘கோட்பட்டான்’ என்பது வருகிறது. வேர் அல்லது ‘செய’ என்னும் வினையெச்சம் தொடக்கத்தில்
தொழிற்பெயரின் தன்மையைப் பெற்று இருந்தது என்பது இவற்றால் புலனாகும். பிற்காலத்தில்
‘படு’ என்பதற்கு மாற்றாகப் ‘பெறு’ என்பது செயப்பாட்டு வினை விகுதியாக வருகிறது.
இ. பிற துணை வினைகள்
‘படு’, ‘பெறு’
முதலிய துணைவினைகள் விகுதிகளாகச் செயலாற்றுவதைக் கண்டோம். ‘வினை + துணைவினை’ என்ற
தொடரானது
|
68.
கலித்தொகை, 65,16.
69.
சிலப்பதிகாரம், 9,22.
70.
தொல்காப்பியம், 156 ஆவது நூற்பா உரை.
|
|