பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

164

மிகப் பழமையானதாகும். ‘திரிதரு’71 என்பது போன்ற வேர்கள் உள்ளன; ஆனால் அவை கூட்டு வேர்களாக இருக்கக்கூடும். ‘செயப்பாட்டுத் தன்மை’ என்பது போன்ற பொருள்களில் துணை வினைகள் வளர்ச்சியுறுகின்றன. ‘இடு’72, ‘விடு’73 முதலான துணை வினைகள் திருக்குறள், கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய வற்றில் நன்கு நிலைபெறுகின்றன. பின்னர் மேலும் மேலும் பல துணைவினைகள் வளர்ச்சியுற்றன. சான்றாகக் கல்வெட்டுக்களின் மொழியைக் காட்டலாம். தற்காலத் தமிழில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகளைத் துணைவினைகள் காட்டுகின்றன.

சங்க இலக்கியங்களின் ஒருவகைப் பாகுபாடு

பழைய வடிவங்களின் ஆட்சியின் அளவையும், வருகை விகிதத்தையும் கொண்டு சங்க இலக்கியங்களைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்:

1. பத்துப்பாட்டு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து,

           குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு.

2. திருக்குறள்.

3. பரிபாடல், கலித்தொகை.

4. சிலப்பதிகாரம்.

5. மணிமேகலை.
 


71. திருமுருகாற்றுப்படை, 1

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு”.

72. திருக்குறள் 552

பரிபாடல் 13, 59

கலித்தொகை 101, 24.

73. திருக்குறள், 1068

பரிபாடல், 6, 93

கலித்தொகை, 61, 24.