பக்கம் எண் :

8
 

தமிழ் மொழி வரலாறு

165

8.பல்லவர், சோழர், நாயக்கர் காலத் தமிழ்

அ. பல்லவர், சோழர் காலத் தமிழ்

சங்க காலத்திற்குப் பிற்பட்ட, அதாவது, பல்லவர், சோழர் காலத்திய தமிழை ஆராய இலக்கியங்களும் உதவுகின்றன. எனினும் கல்வெட்டுக்களே நமக்குக்கிட்டியுள்ள முக்கிய மூலாதாரங்களாகும். இப்பகுதிகளில் தரப்பட்டுள்ள செய்திகளில் பெரும்பகுதி என்னுடைய மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து எடுத்துத் தரப்பட்டனவாகும்.

2. 0 உயிர்கள் (பல்லவர் காலம்)

சங்க காலத்தைப் போலப் பல்லவர் காலத்திலும் / இ எ உ ஒ அ / ஆகிய ஐந்து உயிர்களும் அவற்றின் நீட்சியும் ஒலியன்களாக இருந்தன என்பதைப் பின்வரும் வேற்றுநிலை வழக்குகள் காட்டும்.

அமை

ஆமை

விற்று

வீற்று

குறு

கூறு

எழு

ஏழு

ஒடு

ஓடு

உயிர்களில் எகரம் ஒகரம் தவிர, எஞ்சின மொழி மூவிடங்களிலும் வருகின்றன. எகரமும் ஒகரமும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை.