பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

168

மெய்யொலியன்களின் பட்டியல் வருமாறு:

க் ச் ட்  ற் த்   ப்
    ண் ன்    ம்
  ய் ழ் ர் ல் வ்
    ள்      

இலக்கிய மொழியில் னகரமும் நகரமும், ளகரமும் ழகரமும், றகரமும் ரகரமும் வேற்றுநிலை வழக்கில் வருகின்றன. ஙகரத்தையும், ஞகரத்தையும் ஒலியன்களாக நிறுவ, வேற்றுநிலை வழக்குகள் காணப்படவில்லை. கற்றோர் மொழியில் ‘kh, g, gh, d, dh, th, ph, b, bh, s, ş, kş, h, s, d’ முதலியன உள்ளன; ஆனால் இவை ஒலியன்கள் இல்லை. வட மொழியின் செல்வாக்கு இங்குத் தெளிவாகப் புலப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒட்டக் கூத்தரின் பாடல்களில் ரகரமும் லகரமும் மொழி முதலில் வருகின்றன. வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதால் தமிழில் வழங்காத ஒலிக்கூட்டுக்களும் வருகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவணந்தி முனிவர் தெளிவுபடுத்துவது போல, இந்தப் போக்கு மணிப்பிரவாள இலக்கியங்கள் தவிரப் பிறவற்றில் மறைந்து விடுகிறது.

4. 0 மாற்றங்கள் - பொது

மெய்யொலிகளில் ஏற்படும் மாறுதல்களால் சிக்கலெதுவும் இல்லை. உயிரொலி மாற்றங்கள் அவ்வாறல்ல. முதலில் அவற்றின் அளவில் மாறுதல் இருந்தது. அவற்றின் தன்மையிலும் மாறுதல் இருப்பது மேலும் வியப்பளிப்பதாயுள்ளது. மொழி முதலில் ஏற்படும் ‘இ > எ’, ‘உ > ஒ’ ஆகிய மாற்றங்களை டாக்டர் கால்டுவெல் விவரித்துள்ளார். எகர, உகரமாக உயிர்கள் மாறுவது பின்னர் விளக்கப்படும். அது போல அகரமாக மாறுவதை விளக்க இயலவில்லை. பேச்சு மொழி உச்சரிப்பு குறிப்பாக உணர்த்துவது போல அகர வரிவடிவம் உச்சரிப்பில் பல்வேறு மதிப்புக்களைக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. சொற்களின் பழைய வடிவங்களில் பின்னர் அகரம் வரும்பொழுது இந்தச் சிக்கலுக்கு விளக்கம் தோன்றுகிறது. அய் > எய் > எ > அ, அவ் > அ, அய் > அ > எ போன்ற சிதறலான, தொடர்ச்சியற்ற மாற்றங்களும் கூடப் பிற்காலத்திய பேச்சு மொழிச் சொற்கள் பலவற்றை விளக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அவையெல்லாம் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.