பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

170

முந்திய அல்லது அடுத்த ஒலி இதழொலியாகவோ, நாவளையொலியாகவோ இருக்குமாயின் உகரம் வருகிறது. தமிழ் இயற்சொற்களிலும் விரைந்தொலித்தலால் ஏற்படும் ‘மயக்கங்களைத்’(clusters) தவிர்க்க இவை வருகின்றன. தகர, ரகர, மெய்களைப் பொறுத்த வரையில் மயக்கங்கள் தோன்றும் போக்கினை வீரமாமுனிவர் கவனித்துள்ளார்.

சான்று :

திரிசி

>

த்ரிசி

 

 

 

பலா

>

ப்லா

>

பிலா

 

புறா

>

ப்றா

>

பிறா

பல்லவர் காலத்தைச் சேர்ந்தனவாகக் கவனிக்கப்பட்ட மாற்றங்களை இங்குத் தொகுக்கலாம்.

- அ - > - இ -

மங்கலம்

>

மங்கிலம்

மேலன

>

மேலின

கடா

>

கிடா

மதுரை

>

மதிரை

ஆ. சுரபத்தி - / உ

பிறிதொரு சுரபத்தியான உகரமும் வழக்கில் உள்ளது. இம் மாற்றம் பிற்காலத்தில் காணப்படும் வடிவங்களைக் கொண்டு விளக்கப்படுகிறது.

சான்று :

மகிழ

>

மக்ழ*

>

மகுழ

விழிஞம்

>

வுழிஞம்

4. 3 உயிரொலி மாற்றத்திற்கான காரணங்கள்

உருபனியல், ஒலியியல் தனித்தன்மைகளின் விளைவாக, இதே போக்கு சோழர் காலத்திலும் தொடர்கிறது.

சான்று :

- அ - > - இ -

அதனுக்கு

>

அதினுக்கு

சுலபம்

>

சிலபம்

மேலன

>

மேலின

- அ - > - உ -

கொண்டது

>

கொண்டுது

புகுந்தது

>

புகுந்துது