|
தமிழ் மொழி வரலாறு 171
தொடர்ந்து வரும் இதழொலி
அல்லது பல்லிதழ் ஒலி அகரத்தை இதழ்குவிவைப் பெறுமாறு செய்து உகரமாக்குகிறது.
சான்று :
|
|
|
கேசவன் |
> |
கேசுவன் |
|
உ |
> |
இ |
|
|
|
|
|
அமுது |
> |
அமிது |
|
|
|
அருளின |
> |
அரிளின |
|
|
|
சதுரத்து |
> |
சதிரத்து |
|
|
|
செலுத்தி |
> |
செலித்தி |
|
எ |
> |
இ |
|
|
|
|
|
பெயரால் |
> |
பியரால் |
|
|
|
செலவு |
> |
சிலவு |
உருபனியல் மாற்றம்
மேலே குறிப்பிடப்பட்ட
மாற்றம் உருபனியலில் ஏற்படும் ஒரு மாற்றத்தின் விளைவாலும் ஆகும். இவைகள் சாரியைகள்
என்றழைக்கப்படுகின்றன; அதாவது இவை பழைய சிறப்பை இழந்து விட்ட உருபுகளாகும்.
தொல்காப்பியர் காலத்தில் ‘இன்’ என்பதைவிட ‘அன்’ என்பது பெருவழக்கு உடையதாக இருந்தது.
பிற்காலத்தில் ‘அன்’ வருமிடங்களில், ‘இன்’ வருகிறது. தொல்காப்பியத்திலேயே
இப்போக்கைக் காணலாம்.
+ அன் +
அ > + இன் + அ > மேலின எனும் மாற்றம் இவ் உருபியல் மாற்றத்தின் விளைவாகலாம்.
உருபனியல்
நிலையில் உள்ள பிறிதொரு போக்கால் இகரம் உகரமாக மாறியிருக்கலாம். ஒரு அடியோ (சான்று
: பங்கு) அல்லது ‘செய்து’ எனும் வினை எச்சமோ (சான்று : கொண்டது) உகரத்தில் முடிந்தால்
கட்டு வடிவங்களில் கூட அது பேணிக் காக்கப்படுகிறது. பின்வரும் உருபுகளிலுள்ள பழைய உயிர்கள்
இழக்கப்படுகின்றன.
சான்று :
பங்கினால்
> பங்குனால் (பங்கு + இன் + ஆல்)
கொண்டது
> கொண்டுது (கொண்டு + அ + து)
உருபனியல்
நிலையில், ஒப்புமையாக்கத்தால் வரும் பிறிதொரு போக்கும் உண்டு. ‘செய்து’ எனும் வினை
எச்சங்கள் பல உகரத்தில் முடிகின்றன. ஆனால் வேர்கள் என்பன குற்றுயிர் உகரத்தில்
|