|
தமிழ் மொழி வரலாறு 172
முடிந்தால்,
சேர்க்கப்படும் உருபு ‘இ’ ஆகும். ‘செய்து’ எனும் வினையெச்சங்கள்
சிலவற்றில்
இவ்வாறாகத் ‘தி’ என்பது இறுதி அசையாக இருக்கும் துகரத்தை அடிப்படையாகக் கொண்டு,
மிகுதியாக வழங்கும் ‘செய்து’ எனும் வினை எச்சத்தின் ‘தி’ முடிவானது ஒப்புமையாக்கத்தால்
துகர முடிவாகிறது. இதற்கான சான்றுகள் எட்டாம் நூற்றாண்டிலும் பதினோராம் நூற்றாண்டிலும்
உண்டு.
சான்று :
அடிப்படுத்தி
> அடிப்படுத்து
படுத்து என்பது படு
என்பதன் இறந்தகாலமாகவும் இருக்கலாம்.
ஒலிமாற்றங்கள் :
அ. முன் உயிர்கள்
உயிர்த் தொடராதல்
முன் உயிர்களான இ, ஈ,
எ, ஏ முதலியன யகர மெய் முடிவுடன் உயிர்த் தொடராக மாறுகின்றன. ‘ஐ’ என்பது கூட ‘ஐய்’ என
எழுதியுள்ளமை அறியப்பட்டுள்ளது.
ஆ. உயிர்களில் மாற்றம்
முதலசையில் இ, உ
என்பன முறையே எ, ஒ வாக மாறுகின்றன. ஆனால் இப்போக்கு சமஸ்கிருதச் சொற்களைப் பொறுத்த
வரையிலேயே காணப்படுகிறது.
சான்று :
|
நிதி |
> |
நெதி |
|
புத்தகம் |
> |
பொத்தகம் |
|
உலகம் |
> |
ஒலகம் |
இகரம், ஒகரமாக ஒரே
வழி மாறுவது தமிழ்ச் சொற்களிலும் உள்ளது.
சான்று :
பிறவும் > பெறவும்
ஆனால் இதற்கு
முரணான போக்கும் உண்டு. அது போலி நாகரிக ஆக்கத்தின் (Hyperurbanization)
விளைவாகலாம் ‘எனக்கு’ என்பதற்குப் பதில் ‘இனக்கு’ எனும் வடிவம் 11 ஆம், 13 ஆம்
நூற்றாண்டுகளில் காணப்படுகிறது.
பதினோராம்
நூற்றாண்டிலிருந்து தமிழ்ச் சொற்களிலும் உகரம் ஒகரமாக மாறுவது மிகுதியாக நிகழத்
தொடங்கியது.
|