பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

173

சான்று :

குலைதர

>

கொலைதர

குந்தள அரசர்

>

கொந்தள அரசர்

உபாதி

>

ஒபாதி

குலோத்துங்க

>

கொலோத்துங்க

இ. இ > அ

இகர அகர மாற்றங்களும் உண்டு.

சான்று :

எதிர்

>

எதர்

அதியமான்

>

அதயமான்

ஞாயிறு

>

ஞாயறு

பெறுமிடத்து

>

பெறுமடத்து

இக்காலப் பேச்சு வழக்கிலும் பின்வருவன உள்ளன.

ஞாயிறு > ஞாயறு
         வயிறு > வயறு

இம்மாற்றங்கள் பின்னர் விளக்கப்படும்.

ஈ. இடையண்ணச் சாயல் பெறுதல்

இடையண்ணச் சகர மெய்க்குப் பின்னர் மொழியிறுதி உகரம் இகரமாக இடையண்ணச் சாயல் பெறுவதையும் குறிக்கலாம்.

சான்று :

கழஞ்சு > கழஞ்சி

நுனிநா பல் வெடிப்பொலி தகரமும் அதற்கு இனமான மூக்கொலி நகரமும், இ, ய், ஐ ஆகியவற்றுக்குப் பின்னர் சேர்ந்து வரும் பொழுது இடையண்ணச் சாயல் பெறுகின்றன.

சான்று : ஐந்து > அஞ்சு

அகரத்தைத் தொடரந்து இடையண்ண ஒலி வருமாயின், அது ஐ என மாறுகிறது.

சான்று : அரசர் > அரைசர்

இது பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டு இலக்கிய வழக்குகளில் தொடர்கிறது.