பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

174

சான்று :

சமயம் > சமையம்
வேள்குலச்சளுக்கு > வேள்குலைச்சளுக்கி
தச்சன் > தைச்சன்

இடையண்ண ஒலி முன்னரோ அல்லது பின்னரோ வாராத நிலையிலும் அ > ஐ மாற்றம் உண்டு. இது இக்காலத்திலும் கூடச் சில சமூகக் கிளை மொழிகளில் (social dialects) காணப்படுகிறது.

சான்று : அத்தை > ஐத்தை

இது பாமரர் (folk etymology) பாங்கினாலான வழக்கு எனவும் கூறலாம். ஐ ¥ ஆய் என்றால் அன்னை என்பது பொருள்.

ஐ > அ

‘ஐ’ அகரமாக மாறுமிடங்கள் உண்டு. ஐந்து > அஞ்சு, இரட்டித்த நுனிநா பல் மூக்கொலிகள் கூட இடையண்ண ஒலிகளை அடுத்து இடையண்ண மூக்கொலிகளாகின்றன.

- ந்ந் - > ஞ்ஞ -

ஐந்நூறு > ஐஞ்ஞூறு

இந்நிலம் > இஞ்ஞிலம்

ஐ > எ

‘அரசர் ணு அரைசர்’ என்பது ‘அரெசர்’ என்றும் காணப்படுகிறது. ஐகாரம் எகரமாகிறது. சினை > சினெ; எல்லை > எல்லெ; தலை > தலெ.

இறுதி எகரம்

மொழி இறுதி எகரம் பண்டைத் தமிழில் இல்லை. அது இப்பொழுது வழங்கத் தொடங்குகிறது. அது ஏ > எ, ஐ > எ மாற்றங்களின் விளைவாகலாம்.

எகரத்தின் மதிப்பு

அரைசன் > அரெசன் என்றாகும் பொழுது குறில் எகரம் அகரமாக அடிக்கடி எழுதப்படுகிறது. அது மொழி இடையில் வருவதில்லை. கீழ் நடு அகரம் அவ்விடத்தில் முன் கீழ் இடை ‘ε’ கரமாகிறது என்பதை அரெசன் என்ற வடிவம் காட்டுகிறது.

வடமொழிச் சொற்களில்

இது முதலசையில் உள்ள அகரத்திற்கும், அதிலும் சிறப்பாக ஒலிப்புடை மெய்யுடன் தொடங்கும் சமஸ்கிருதச் சொற்