|
தமிழ் மொழி வரலாறு 175
களைப் பொறுத்த
வரையிலும் மிகுதியாக ஏற்படுகிறது. இவை ஒரே மாதிரியாகப் பின்வருமாறு தமிழாக்கப்படுகின்றன.
கங்கா
> கங்கை ¥
கெங்கை
தண்டா > தண்டம் ¥
தெண்டம்
தமிழ்ச் சொற்களில்
பத்தாம்
நுற்றாண்டிற்குப் பிறகு சமஸ்கிருதச் சொற்களுடன் பிறசொற்களிலும் இம்மாற்றம் ஏற்படத்
தொடங்கியது.
|
கல் |
> |
கெல் |
|
களிறு |
> |
கெளிறு |
உ. இகரத்திற்கு முன்னர் வரும்
மொழி முதல் உடம்படுமெய்
பல்லவர்
காலத்தில் முன் உயிர்கள் யகர உடம்படுமெய்யுடன் உயிர்த் தொடர்களாயின என்பதை முன்னர்க்
கண்டோம். 11, 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் முன் உயிர்கள் யகர உடம்படு மெய்யை மொழி
முதலில் பெறத் தொடங்குகின்றன.
சான்று :
|
இக்கோயில் |
> |
யிக்கோயில் |
|
இரண்டு |
> |
யிரண்டு |
|
இறை |
> |
யிறை |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தகைய உச்சரிப்புக்களைக் கால்டுவெல் கவனித்துள்ளார்.
இதன் காரணமாக மொழி முதலிலில்லாத இடங்களிலும் யி > இ் ஆக மாறும் ‘போலி நாகரிக
ஆக்கம்’ உள்ளது.
ஆயிரம்
> ஆஇரம்
வரலாம் எனக்
கொள்ளப்பெற்ற உயிர் மயக்கத்தையுடைய பழைய வடிவமான ‘ஆஇரம்’ என்பதிலிருந்து, இவ்வடிவம்
மாறுபட்டது.
ஊ. இதழ்ச்சாயல்
பெறுதல்
அகரத்தைத்
தொடர்ந்தோ அல்லது அதற்கு முந்தியோ இதழுயிர் வருமாயின் அகரம் இதழ்ச் சாயல் பெறுகிறது.
சான்று :
|
வானகப்பாடி |
> |
வானகொப்பாடி |
|
அனுபவித்து |
> |
அனுபொவித்து |
|
புறவரி |
> |
புறொவரி |
|
செப்பருந்திறத்து |
> |
செப்பொருந்திறத்து |
|