பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

176

இதே சூழலில் வேறிடங்களில் அகரம் நடுப் பின் உயிராகவோ அல்லது பின் இதழ்விரி உயிராகவோ உச்சரிக்கப்படும். இக்கால உச்சரிப்புக்களிலும் இதழொலியாதலைக் காண்கிறோம். ‘கம்பம் > கம்பொம் ணு கம்பொ’ முன்னிலைப் பன்மை விகுதியான ‘உங்கள்’ என்பது ‘உங்கொள்’ என்றாகிறது. கள் > கொள் ஆவது, வைணவ மணிப்பிரவாள நடையில் கூட இந்தக் கால கட்டத்தில் அமைந்துள்ளது. ‘கேட்டீர்கள்’ என்பத்றகுக் ‘கேட்டீர்கொள்’ என்ற வடிவத்தையும், ‘காடுகள்’ என்பதற்குக் ‘காடுகொள்’ என்பதையும் காண்கிறோம்.

இ > உ

பின்வருபவற்றை நோக்குக. அவை பின்னர் விளக்கப்படும்.

களிறு

>

களுறு

தமிழ்

>

தமுழ்

தம்பிரான்

>

தம்புரான்

மதில்

>

மதுல்

முசிறி

>

முசுறி

எகரமும் பின்னரோ அல்லது முன்னரோ இதழ் ஒலிகளோ நாவளை ஒலிகளோ நுனியண்ண ஒலிகளோ வருமாயின் இதழ்ச் சாயல் பெறுகிறது. சான்று : ‘எப்பேர்பட்ட > எப்போர்பட்ட’ என்பது 11, 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வருகிறது.

தென்றிசை

>

தொன்றிசை

செம்பாத

>

சொம்பாதி

நெளித்து

>

நொளித்து

செவிடு

>

சொவிடு

‘சொவிடு’ என்ற வடிவம் பின்னர் ‘சோடு’ என்றானது. ‘செம்’ > ‘சொம்’ என்பதன் அடிப்படையிலான ஒப்புமையாக்கத்தால் ‘செந்தாமரை > சொந்தாமரை’ என்றாகிறது. இவற்றிலெல்லாம் எகரம் நடு உயிராகவும் இதழ்குவி உயிராகவும் ஆக்கப்படுகிறது.

5. 0 மெய்கள்ட், ற்

தொல்காப்பியர் காலத்தில் நாவளையொலியாக இல்லாதிருந்த டகரம் இப்பொழுது சமஸ்கிருதச் செல்வாக்கால்