பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

177

நாவளையொலியாகிறது. தமிழ் டகரத்தை சமஸ்கிருத வரிவடிவத்தில் எழுதியிருப்பதைக் காணும் பொழுது இது புலனாகும். நுனியண்ண வெடிப்பொலியான றகரமும் சமஸ்கிருதத்தில் நாவளையொலி டகரமாக எழுதப்பட்டது காணப்படுகிறது. இது இரட்டித்து வரும் போது பல்லொலியாக மாறிய நுனிநா பல்லொலியின் உச்சரிப்பினைப் பாதித்திருக்க வேண்டும்:

மெய்யொலிகள் இடையண்ணச் சாயல் பெறுதல்

i. ஞ்

இலக்கிய மொழியில், அப்பர் பாடல்களில் பின்வருவன காணப்படுகின்றன.

 

கைந்நின்ற > கைஞ்ஞின்ற
மெய்ந்நின்ற > மெய்ஞ்ஞின்ற
செய்ந்நின்ற > செய்ஞ்ஞின்ற

சில போது முன்னர் வரும் இடையண்ண அல்லது முன் உயிர் இதற்குக் காரணமாக - சூழலாக - அமைகிறது எனக் கருதலாம். எனினும் வேறு பலவிடங்களில் இப்படிப்பட்ட சூழல்களை வரையறுக்க முடியாது.

  நெகிழ்த்து > ஞெகிழ்த்து ;
முந்நாழி > முஞ்ஞாழி
நகர் > ஞகர்

ஒருவேளை இவற்றிலெல்லாம், கிளைமொழி வழக்குகளிலும் மலையாளத்திலும் தொடர்ந்து பயன்படுத்தப்பெற்ற ஞகர மெய்யே மூல ஒலியாக இருந்திருக்கலாம்.

ii. ச்

‘த்த்’ கூட, அதன் முன்னர் இடையண்ண ஒலி அல்லது முன் உயிர் வருமாயின் அண்ணச் சாயல் பெற்று ‘ச்ச்’ என்றாகிறது.

சான்று : வைத்த    >     வைச்ச

சிலப்பதிகாரத்திலும் இடையண்ண மூக்கொலி இரட்டை வருகிறது.

சான்று : அஞ்ஞை, முஞ்ஞை, மஞ்ஞை

‘ஞாய்’ என்பதில் உள்ள ஞகர மெய் முன்னிலை இடப் பெயரின் மொழி முதல் மெய் ஆகும். இடையண்ண மூக்கொலிகள் மலையாளத்திலும் தமிழில் சில வட்டார வழக்குகளிலும் தவிர;