பக்கம் எண் :

New Page 1

தமிழ் மொழி வரலாறு


178

ஏனைய திராவிட மொழிகளில் மறைந்து விட்டன. இகர அல்லது யகரத்திற்குப் பின்னே வரும் இடையண்ண மூக்கொலிகள் பல்லவர் கால இலக்கிய மொழியில் வந்தன. ஆனால் விரைவில் இவையும் நின்று போய்விட்டன. சோழர் காலத்தில் நுனிநா பல் ஒலிகள் போற்றப்பட்டன. இவ்வொலிகளைத் தொடர்ந்து வைத்திருந்த மலையாளம் தனி மொழியாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டது. நன்னூல் உரையாசிரியர் அண்ணச்சாயல் பெறுவதைக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார். ஆனால் ‘த்த்’ என்பதன் அண்ணச்சாயல் பெற்ற வடிவங்கள், இன்று வரை பேச்சு மொழியில் உள்ளன.

சான்று :

வைத்து    >  வைச்சு

பின்னர் மொழியிறுதி உகரமும் இகரமாகிறது.

 

வைச்சு > வைச்சி

அஞ்சு > அஞ்சிஎன வருவதையும் காண்க.

அண்ணச் சாயல் பெறுவதற்குக் காரணமாக இருந்த இகரம் அல்லது யகரம் பின்னர் மறைகிறது.

iii. சூழல் மறைதல்.

வேர்களின் இறுதியில் வரும் யகர மெய் பதினோராம், பன்னிரண்டாம் நுற்றாண்டுகளில் மறைகிறது.

சான்று :

 

வாய்க்கால் > வாக்கால்
செய்த > சேத
மேய்ந்த > மேந்த


அண்ணச் சாயல் பெறுதல் மறைந்து பல்லினச் சாயல் பெறுதல் இடம் பெறுகிறது

இடையண்ண ஒலிகள் பல்லினச் சாயல் பெறுதல் சோழர் காலத்தில் நன்கு நிலைபெற்று விட்டது.

சான்று :

 

ஞாயிறு > நாயிறு
சண்டேஸ்வர > தண்டேஸ்வர
செரு முனை > திருமுனை

இதன் விளைவாகக் கொங்கு நாட்டில் ஞகர மெய் இடையண்ண வெடிப்பொலிக்கு முன்னர் வருவதைத் தவிர பிறவிடங்களில் வழக்கிழந்துவிட்டது.