|
தமிழ் மொழி வரலாறு 179
6. 1
வெடிப்பொலிகள்
ஒலிப்புடையொலியாதல் : கல்வெட்டுச் சான்று
பல்லவர் காலத்தில்
வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளாக
உச்சரிக்கப்பட்டதற்குச்
சான்றுகள் உண்டு. ஆனால் இது எல்லாக் கிளைமொழிகளிலும் ஒரே மாதிரியாகக் காணப்படவில்லை.
இம்முடிவு கல்வெட்டுக்களின் சமஸ்கிருதப் பகுதியில் வரும் தமிழ் இடப்பெயர்களையும்,
உயர்திணைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கல்வெட்டுக்களின் தமிழ்ப்
பகுதியில் கூட சமஸ்கிருதத்தைத் தென்னகத்தில் எழுதப் பயன்படுத்திய கிரந்த எழுத்துக்கள்
சிலவிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சான்றாக ‘ந்த்’ என்பது கிரந்தத்தில்
எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் சமஸ்கிருத ஒலிப்புடை ஒலிகள்கூட ஒலிப்பிலா ஒலிகளாகச்
சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவையே வேறிடங்களில் ஒலிப்புடை ஒலியாக
எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் சான்றுகளை இரு தலைப்புக்களின் கீழ் ஆராயலாம்.
1.உயிர்கட்கு இடையில் வரும் வெடிப்பொலிகள்.
2.
இன
மூக்கொலிகட்குப் பிறகு வரும் வெடிப்பொலிகள்.
ஒலிப்புடை
வெடிப்பொலி எதுவும் வருமாயின் அதை சமஸ்கிருத உச்சரிப்பு பேணப்படுவதற்கான சான்று
எனக்கொள்ளலாம். எனவே அவை இங்கு ஆராயாது விடப்படுகின்றன.
அ. உயிரிடை வெடிப்பொலி
கி.பி.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுஞ்சடையன் பராந்தகனின் (765 - 790) வேள்விக்குடிச்
சாசனத்தில் பின்வருமாறு உள்ளது :
parஏgan
> parஏkan (சமஸ்கிருத இயற் பெயர்)
வரகுணனின் (800
- 830) சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகளில் பின்வருமாறு உள்ளது:
Vatakalavali
ஒன்பதாம்
நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் நந்திவர்மனின் பாகூர்ச் செப்பேடுகளில் பின்வருமாறு
உள்ளது:
Nilaitangi
பத்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகளில் பின்வருமாறு வருகின்றன :
|