பக்கம் எண் :

New Page 3
 

தமிழ் மொழி வரலாறு

182

குமாரிலபட்டரின் சான்று

சமஸ்கிருதத்தில் புகுந்த சில சொற்களைக் குமாரிலபட்டர் குறிக்கிறார். ஆனால் அவரது கருத்துப்படி அவை சமஸ்கிருதச் சொற்களல்ல. அவை தமிழ்ச் சொற்கள் என இப்பொழுது இனங் காணப்பட்டுள்ளன. புகழ் பெற்ற அவரது சொற்கள் வருமாறு :

“எனவே திராவிட மொழி முதலானவற்றில் மெய்யில் முடியும் சொற்களுடன் உயிர் ஒலியையோ அல்லது பெண்பால் விகுதியையோ சேர்ப்பதால் நமது மொழியின்(சமஸ்கிருதத்தில்) வேறு பொருள் தருகின்ற சொற்களைப் பெறுகிறோம். சான்றாகச் ‘சோர்’ என்பது ‘சோர’ என்றாகும் பொழுது, திருடன் எனப் பொருள்படுகிறது. இங்ஙனமே ‘உண்மை’ கடத்தற்கு அரியதாய் இருப்பதால் (dustra) பாதையானது “கடத்தற்கு முடியாததாக” (atara) இருக்கிறது என்ற பொருளில் ‘அதர்’ என்பதை ‘அதர’ என ஆக்குகிறோம். பகரத்தில் முடியும் ‘பாப்’ என்ற சொல் ‘பாம்பு’ என்ற பொருளைத் தருகிறது; ஆனால் - அதனுடன் அகரத்தைச் சேர்க்கின்ற பொழுது ‘பாப’ என்றாகிறது. “உண்மை; அது பாபமாகும்” என்று கொள்கிறோம். இது போலவே ‘மால்’ (= பெண்) என்பதனை ‘மாலா’ = மாலை என்றாக்கலாம். இதனை உண்மை என்கிறோம். இது போலவே ரகரத்தில் முடியும் ‘வைர்’ வயிறு என்ற பொருளைக் குறிக்கும். ஆனால் வைர் என்று சொல்லிப் பாருங்கள். மக்களைக் குற்றஞ் செய்யத் தூண்டுகின்றமையால் வயிறு ஒரு பகைவன் (வைரி) போலவே செயல்படுகிறது. திராவிட மொழிகளைப் பொறுத்த வரையில் சொற்களை எளிதாக விளக்கலாம். எனினும் பாரசீகம், காட்டுமிராண்டிக் கிரேக்கம், உரோமன் போன்ற மொழிச்சொற்களை எங்ஙனம் விளக்கலாம் என்பது தெரியவில்லை.”

முதலில் பின் வரும் உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம்:

1. ‘ச்’ என்பது முதலில் ஒலிப்பிலா இடையண்ண ஒலியாகவே இருந்தது(சோர்).
2. இதழ்விரி உயிர்கள் அவரால் கவனிக்கப்படவில்லை (சோர்).
3. ‘மால்’ என்பதும் ‘மாள்’ என்பதும் ஒன்றே. இது மகள் என்பதன்
   மாற்று வடிவமாகும். லகர, ளகர மெய்களின் வேறுபாடு
   சமஸ்கிருதத்தில் உணரப்படவில்லை.