|
தமிழ் மொழி வரலாறு 183
4. நுனியண்ண
வெடிப்பொலி உயிரிடையிலும் இறுதியிலும் ரகர மெய்
யிலிருந்து வேறுபடுத்தி (vair
~
vairu)
உணரப்படவில்லை.
5. ‘பாம்பு’ என்பதன்
வேற்றுமை உருபேற்கத் திரிந்தவடிவம் ‘பாப்’ என்
பதாகும்.
இவற்றோடு கூட
இன்னும் முக்கியமாக உயிரிடை வெடிப்பொலி ஒலிப்பிலா ஒலியாகவே அவர் காலத்தில் இருந்தது
என்பதை மேலே குறிப்பிடப்பட்ட பகுதி மெய்ப்பிக்கிறது.
முடிவு
முன்னர்க் கூறிய
சான்றிலிருந்து ஒலிப்புடைமைக்கான திட்ட வட்டமான சுவடு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான்
கிடைக்கிறது. ஆனால் பின்னர் இதன் வழக்காறு மிகுந்து கொண்டே செல்கிறது. இப்புதிய
உச்சரிப்பானது பழைய உச்சரிப்பை முழுவதுமாக அகற்றிவிடவில்லை. அதாவது கட்டற்ற அல்லது
நிபந்தனையற்ற மாற்றம் நிகழ்கிறது. மூக்கொலிகளை அடுத்த வெடிப்பொலிகளில்
ஒப்புடையனவாதல் மிகுதியாக இருந்திருக்கலாம். இம்மாற்றந்தான் முதலில் நிகழ்ந்திருக்க
வேண்டும்; பின்னர் வெடிப்பொலிகள் அச்சூழலில் மூக்கினச்சாயல் பெற்றன. ‘மூக்கினச்சாயல்
பெறுதல்’ முதலில் கடையண்ண வெடிப்பொலியைப் பாதித்திருக்கலாம். ‘அங்கனம்’
என்பதற்குப்பதில் ‘அங்ஙனம்’ என்பது செய்யுட்களில் கூட வருவது இம்முடிவை உறுதிப்படுத்தும்.
ஏனைய வெடிப்பொலிகள் ஒரோ வழி மூக்கினச் சாயல் பெறுதல் என்பது சோழர் காலத்தில்
தொடங்கியது.
முகத்து > முகந்து
பெரும்பாணப்பாடி > பெரும்மாணப்பாடி
அம்பது
> அம்மது
இப்போக்கு
மலையாளத்தில் நிலையாக இடம் பெற்றது. தமிழில் கூடப் பிற்காலத்தில் இது வளர்ந்தோங்கி
வந்துள்ளது.
6. 2 ஒன்றாதல்
நகர மெய்யும் னகர
மெய்யும் ஒன்றாதல்
நுனிநா பல் மூக்கொலி
நகரமும், நுனிநா நுனியண்ண மூக்கொலி னகரமும் ஒன்றாதல் அடுத்த முக்கியமான பெரிய
மாறுதலாகும். தொல்காப்பியர் காலத்திலேயே இம்மாற்றத்திற்கான அடிப்படை அமைந்திருக்கக்
காண்கிறோம். ஆரம்ப நூற்றாண்டுகளில்
|