|
தமிழ் மொழி வரலாறு 185
|
1. |
ற்கு |
> |
ர்க்க்; |
மேற்கு |
> |
மேர்க்கு |
|
|
|
ற்ப் |
> |
ர்ப்ப்; |
ஏவற்படி |
> |
ஏவர்ப்படி |
|
|
2. |
ர்க் |
> |
ற்க்; |
கார்க்களிறு |
> |
காற்களிறு |
|
|
3. |
ர்க்க் |
> |
ற்க்க் |
ஊர்க்கால் |
> |
ஊற்க்கால் |
|
|
4. |
அ) - ர் - > - ற் - |
தரை |
> |
தறை |
|
|
ஆ) - ற் - > - ர் - |
நிறுத்த |
> |
நிருத்த |
முதல் நிலையின் சுவடுகள் பத்தாம் நூற்றாண்டில் காணப்படுகின்றன; நான்காம் நிலையின்
சுவடுகள் பதினோராம் நூற்றாண்டில் காணப்படுகின்றன. இவ்விரு ஒலிகளும் ஒன்றாவதன் விளைவாக
இவற்றுக்கிடையேயான மயக்கம் மிகுதியாகிறது.
ளகர மெய்யும் ழகர
மெய்யும் ஒன்றாதல்
சில
கிளைமொழிகளில், குறிப்பாகத் தென்மாவட்டக் கிளை மொழிகளில் ளகர மெய்யும் ழகர
மெய்யும் ஒன்றாதல் மற்றொரு ஒலியன் மாற்றமாகும். இங்கு இரு மாற்றங்கள் உண்டு.
வட மாவட்டக்
கிளை மொழிகளில் ளகர மெய் ழகர மெய்யுடன் ஒன்றாகிறது. ஏழாம் நூற்றாண்டிலேயே ‘ஆள்’
என்பது ‘ஆழ்’ என ‘நாடாழ்ச்சி’ என்ற சொல்லில் எழுதப்பட்டது. ‘ஆள்’ ( ஆளுதல் ) என்ற
வேர் தொடர்ந்து ‘ஆழ்’ என்னும் மாற்று வடிவத்தைப் பெற்றுள்ளது. பதினோராம் நூற்றாண்டில்
‘கேள்’ என்பது ‘கேழ்’ எனக் ‘கேழ்வி’ என்ற சொல்லில் எழுதப்பட்டது. பின்னர் இவ்விரு
வேர்களுடன் கூடப்பின்வரும் சொற்களிலும் இப்போக்கு காணப்படுகிறது.
களம் > கழம்
உப்பளங்களுக்கு > உப்பளங்கழுக்கு
வளம் > வழம்
‘கொள்’
என்னும் வேரும் இதே மாற்றத்திற்கு உள்ளாகிறது. பன்மை மிகுதியான ‘கள்’ மொழிக்கு
இறுதியில்
வராத பொழுது இதே
மாற்றத்திற்கு உள்ளாகிறது. இம் மாற்றங்கள் பிற வடிவங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றன.
வைணவச் சான்றோர்களின் பெயரான ‘ஆழ்வார்’ என்பது முதலில் ‘ஆள்வார்’ என்றே இருந்திருக்க
வேண்டும். அரசர்கள் ‘ஆள்வார்’ என்று அழைக்கப்படுவதை நோக்குக.
|