பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

186

தென் மாவட்டங்களில் வலுவாக நிலைபெற்றுவிட்ட மாற்றமாகிய ழகரமும் ளகரமும் ளகரமாக ஒன்றாதல் மிகவும் முக்கியமானது. இந்த ஒன்றாதலின் சுவடுகள் எட்டாம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன.

கிழமை

>

கிளமை

கிழக்கு

>

கிளக்கு

புகழ்

>

புகள்

பதினோராம் நூற்றாண்டு இலக்கணமான வீரசோழியம் ளகர மெய் முடிவிற்குரிய சந்தி விதிகளை ழகர மெய் முடிவிற்கும் விரிவுபடுத்துகிறது.

வாள் + நாள்

>

வாணாள்

வாழ் + நாள்

>

வாணாள்

ழகர மெய்யும் ளகர மெய்யும், ளகர மெய்யாக ஒன்றாதலைச் சில இலக்கண ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டனர் என்பதை இது காட்டுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த பவணந்தியார் பழைய சந்தி விதியின் ஆட்சி விரிவானது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இவ்வாறு மொழியின் பழைய நிலைக்கே வழக்கு மாறிச் செல்கிறது.

ல் ¥ ள்

தற்காலத்திய ஈரோட்டுக் கிளைமொழியில் லகர மெய்யும் ளகர மெய்யும் ஒன்றாகின்றன. இம்மாற்றத்திற்கான சுவடுகள் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் தொகை மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றை எழுத்துப் பிழைகள் எனத் தள்ளி விடலாம்.

6. 3 பிற மாற்றங்கள் -- ய், ர், ல்

அ. ய்

முன்னரே குறிப்பிடப்பட்டது போல மொழி இறுதியில் வரும் யகர மெய்கள் மறைகின்றன. இம்மறைதலைத் தவிர்க்க இவ்வொலி சிலவிடங்களில் ‘யி’ என உச்சரிக்கப்படுகிறது.

சான்று : செய் >செய்யி

ஆ. ய், ர், ல் :

தொடைநயம், அசை அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்த வரையில் இம்மெய்கள் மூன்றையும் இல்லாதனவாகக் கருதலாம்