|
தமிழ் மொழி வரலாறு 187
என யாப்பாசிரியர்கள்
கூறுகின்றனர். ஓரசையைத் தொடர்ந்து இம்மெய்கள் வந்தால் அவ்வசை மூடசையாக ஆகாது. ஆகையால்
இடத்தால் அது நெடிலசையாகும். பதினோராம், பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில்
ன், வ், ம், நெடில் வெடிப்பொலி, ந்த், இடையீடு ஆகியவற்றுக்கு முன்னர் ரகர மெய்
மறைகிறது.
|
சான்று
:
|
கீர்த்தியை |
> |
கீத்தியை |
|
|
கார்த்திகை |
> |
காத்திகை |
|
|
தளர்ந்த |
> |
தளந்த |
|
|
அவர்நாடு |
> |
அவநாடு |
|
|
பெண்டிர் |
> |
பெண்டி |
|
|
வார்த்து |
> |
வாத்து
|
இ. ப்
¥ வ்
ணு ம்
ஒலியன்
மாற்றமில்லாத வேறு சில மாற்றங்களையும் காணலாம். உயிரிடையில் பகரமெய் வகர மெய்யாவது
பல்லவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் நிகழ்கிறது. - ப் - > - ம் - ஆவது
சிலவிடங்களில் காணப்படும் புதிய மாற்றமாகும்.
சான்று :
நிபந்தம் > நிமந்தம்
இலண்டன்
மொழியில் வட்டத்தினர் விளக்குவது போல ‘நி-பம்’ என்னும் இரு அசைகளும் மூக்கினச் சாயல்
பெற்றிருக்கலாம். ஆனால் இது அருகி வரும் வழக்கமாகும். ‘மிருக
~
விருக’ ( ‘விலங்கு’ ) என மொழி முதலில் கூட ஆவது உண்டு.
ஈ. உயிரிடை
வெடிப்பொலி இழப்பு அல்லது க் > ய்; ச் > ய்
உயிரிடை
வெடிப்பொலிகள் இழக்கப்படும் போக்கு ககர, சகர மெய்களைப் பொறுத்த வரையில்
காணப்படுகிறது.
|
சான்று : |
வைகாசி |
> |
வையாசி |
|
|
இசைத்த |
> |
இயைத்த |
இவற்றில்
உயிரிடை வெடிப்பொலி இழக்கப்பட்டு இடையின யகர மெய் புகுந்ததாகக் கருதலாம். ஆனால் வகர
மெய் வர வேண்டிய இடங்களிலும், ஒப்புமையாக்கத்தால் யகர மெய் வருகிறது.
|