பக்கம் எண் :

கள
 

தமிழ் மொழி வரலாறு

189

களில் ஆய்தமும் அசையாக எண்ணப்படும் மெய் எனக் கூறப்பட்டுள்ளது. ஆய்தம் ஒலிப்புடையதா என்ற வினா அடுத்து எழுகிறது. ‘ஒலிப்பிடம்’ ‘ஒத்தவை’ என்ற அடிப்படையில் இணைந்து வரும் வெடிப்பொலிகளைப் பொறுத்த வரையில் ‘நெகிழ்வு’, ‘விறைப்பு’ என்ற வேறுபாடே முக்கியமன்றி, ‘ஒலிப்புடைமை’, ‘ஒலிப்பின்மை’ என்ற வேறுபாடன்று என்பதை மர்ரே çபௌலர் (Murray Fowler) என்பார் குறிப்பிட்டுள்ளார்.1 இவ்விதி இடைக்காலத் தமிழுக்கும் பொருந்தக்கூடும். ‘ஒலிப்புடைமை’, ‘ஒலிப்பின்மை’ என்று பாகுபாடு செய்வது தொடங்கிய பொழுது ‘நெகிழ்ச்சி’ என்பது உரசொலியின் தன்மையைப் பெற்றது என்றும் கூறலாம். இது தொடர்பான விதி இங்கே தரப்படுகிறது.

அது + C - > அது C
அது + V - > அ q V (அதாவது அஃத் V -)

ஈற்றசையில் உள்ள தகர மெய் மொழிமுதல் உயிரால் தொடரப்பட்டால், உரசொலியாகிறது. இவ்விதியின் ஆட்சி ‘அது’ என்ற சொல்லில் மட்டுமே நிகழக் காண்கிறோம். ஆரம்பத்தில் நெடில் உரசொலியான ஆய்தமும் ஒலிப்புடை ஒலியாகியிருக்க வேண்டும். கடைநா கடையண்ண ஒலிகள் நுனிநா பல் ஒலிகள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலும் இது மிகவும் பொருந்தும். சான்றுகள் :

‘அஃது என்னும் வாய்பாட்டில் வரும் சொற்களை மெய் தொடர ஆய்தம் மறைகிறது.2 ஆனால் உயிர் தொடர்ந்தால் ஆய்தம் நிலைக்கிறது. அதாவது ஆய்தம் உயிரிடையாகும். முன்னரே குறிப்பிட்டது போல ஆய்தம் ஒரு உருபொலியன் ஆகும்; அல்லது சொல்லோ, சொல்லுருபோ இணையுமிடத்தில் வரும் இடையீடாகும். ஆனால் பின்னர் அது அடுத்து வரும் வெடிப்பொலியிலிருந்து வேறுபட்ட தனிக்குறிலாகக் கருதப்பட்டது. தொல்காப்பியமே ஆய்தம் அசையாவதற்கு இடந்தருகிறது.3 ஆனால் இது



1.. திருக்குறள், 334, பரிமேலழகர் உரை.
2. Language, Vol 30, pp 360 - 361.
3. தொல்காப்பியம் 423, 424

“முன் உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அவ்வழி யான.”

“ஏனைமுன் வரினே தான்நிலை இன்றே”.