பக்கம் எண் :

பற
 

தமிழ் மொழி வரலாறு

190

பற்றிய நூற்பா இடைச்செருகலாக இருக்கலாம்; ஏனெனில் ஆய்தம் எழுத்து அல்லது ஒலிபோல இயங்காது எனத் திட்டவட்டமாகக் கூறிய தொல்காப்பியர் அதற்கு அசையாக இடந்தந்து, தம்மைத் தாமே முரண்படுத்திக் கொண்டிருக்க மாட்டார். தொல்காப்பியர் காலத்திலேயே மக்கள், உருபொலியன் ஆய்தத்தைத் தனி எழுத்து, ஒலி எனத் தவறாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கலாம். தொல்காப்பிய 40 ஆவது நூற்பா இதைக் குறிப்பது போலத் தோன்றுகிறது.* திருக்குறளின் காலத்தில் ஆய்தம் தனியொலியாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆய்தம் இரு மதிப்புக்களை பெற்றதெனத் திருக்குறளின் யாப்பு காட்டுகிறது.

1. அசை ஒலியாகலியாக4
2. அசையில்லா ஒலியாக5

அதனுடைய சரியான உச்சரிப்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. ‘அஃதை > அகுதை’ என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஆய்தத்தின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டுவதாயிருக்கக் கூடும். ‘எஃகிலங்கிய கையர்’ என்பது ஆய்தம் அசை மெய்யாக வருவதற்குச் சான்றாகும். ஒரு சொல்லின் பழையதொரு வடிவத்தில் புகுத்தப்பட்ட ஒரு கூறாக, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்தில் ஆய்தம் வருகிறது. ‘அழகு > அழஃகு’. இவ் ஆய்தம் ஒலிப்புடையதாக இருக்க வேண்டும்.

ஆய்தம் > ய்
அ. பெருங்கதை

பெருங்கதையின் காலத்தில் ஆய்தம் தனி ஒலியாக யகர மெய்யுடன் எதுகையில் வருகிறது.

சான்று : ‘கய்ந் நவிலாளனை எஃகுள்ளடக்கி’6


* தொல்காப்பியம் 40

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான”.

4. திருக்குறள், 943.
5. திருக்குறள், 236.
6. பெருங்கதை, 1, 56, 161.