பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

191

‘எஃகொழி களிற்றின் வெய்துயிர்த்துயங்கி’7

இங்கு ‘கய்’, ‘எஃ’ என்பவையும் ‘எஃ’, ‘வெய்’ என்பவையும் எதுகையில் வருகின்றன.

ஆ. நம்மாழ்வார்

நம்மாழ்வார் பாடல்களிலும் இத்தொடைநயத்தைக் காண்கிறோம்.

சான்று :

அஃதே
கொய் பூம் பொழில்8
செய்கோலத்து
அஃகாமால்9

திருக்குறளிலும் இத்தொடைநயமிருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.10

இ. இலக்கணம்

இக்காலத்திய இலக்கண நூல்களில் இவ்வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.11 அவிநயத்தில் பின்வருவன உள்ளன :

 

அ + ç > ஐ
அ + ய் > ஐ

இந்த அடிப்படையில் ஆய்தத்திற்கும், யகரமெய்க்கும் இடையே உள்ள ஒத்ததன்மையை நிறுவலாம். தொடை நயம் பற்றி வந்த எதுகை / மோனை காட்டுவதும் இதைத்தான்.

ஈ. கல்வெட்டுக்கள்

குகைக் கல்வெட்டுக்களின் இகர வரிவடிவத்தை 90கு திருப்பினால் வரும் வடிவமே கல்வெட்டுக்களில் ஆய்தமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ‘ய் = இ’ என்பதை நாம் அறிவோம். எனவே இக்கல்வெட்டுக்கள் ஆய்தத்திற்கு ய் அல்லது இகர மதிப்பைத் தருவதாகக் கொள்ளலாம்.
 


7. பெருங்கதை, 1, 33, 109.
8. திருவாய் மொழி, 4 - 11.
9. திருவாய் மொழி, 4 - 11.
10. திருக்குறள் ; 759.
11. யாப்பருங்கல விருத்தி, 30.